Chennai Vs Punjab : பஞ்சாபை பழிவாங்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்

மும்பை :

ஐபிஎல் 2024 சீசனில் புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி 10 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 5 தோல்விகளுடன் தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணியாக சிஎஸ்கே கருதப்படுகிறது. ஆனால் இதுவரை கோப்பையை வெல்லாத பஞ்சாப்பிடம் சிஎஸ்கே தொடர்ந்து 5 முறை தோற்றுள்ளது.

Chennai Vs Punjab :

சமீபத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Vs Punjab) தோல்வியடைந்தது. இந்நிலையில் இந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு தர்மசாலாவில் நடைபெறும் ஆட்டத்தில் சிஎஸ்கே மீண்டும் பஞ்சாப்பை எதிர்கொள்கிறது. சென்னை அணியை வீழ்த்திய பஞ்சாப் அணி சமூக வலைதளங்களில் கடும் கிண்டல் செய்தது. மேலும் தோனியின் ரன் அவுட் குறித்து கிண்டல் செய்து பஞ்சாப் அணி சிஎஸ்கேயை வீழ்த்தியதை அடுத்து சோலி முடிந்துவிட்டதாக பதிவிட்டுள்ளனர். இது சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத பஞ்சாப் அணி, தங்களது அலட்சியத்தை வெளிப்படுத்தும் வகையில் பேசியதாக சிஎஸ்கே ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை 2வது சுற்றில் மீண்டும் பஞ்சாபை சந்திக்கும் சிஎஸ்கே அணி (Chennai Vs Punjab) அபாரமாக விளையாடி பஞ்சாபை தோற்கடிக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தேஷ் பாண்டே :

கடந்த போட்டியில் விளையாடாமல் இருந்த தேஷ் பாண்டே இந்த போட்டியில் களமிறங்குவார் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் தீபக் சாஹருக்கு பதிலாக சர்துல் தாக்கூர் விளையாடும் லெவனில் இடம் பெறுவார் என தெரிகிறது. இந்நிலையில் ராஜவர்தன் ஹங்கர்கேகர் போன்ற இளம் வீரர்களை சிஎஸ்கே அணியில் சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் ரகானே, ஜடேஜா போன்ற வீரர்கள் தங்கள் பார்முக்கு திரும்பி தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், சிஎஸ்கே அணி நிச்சயம் வெற்றி பெறலாம். பஞ்சாப் அணியில் பேரிஸ்டோ, ஷஷாங் சிங், போன்ற வீரர்களும் உள்ளனர். மேலும் ஷிகர் தவான் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள சிஎஸ்கே வீரர்கள் திணறினர். ஆனால், தர்மசாலா ஆடுகளம் ரன்குவிப்புக்கு சாதகமாக உள்ளதால், சிஎஸ்கே வீரர்கள் அதை சிறப்பாக பயன்படுத்தி ரன்குவிப்பில் ஈடுபட வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply