CSK Won Against Punjab : பஞ்சாப் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அசத்தல் வெற்றி

தர்மசாலா :

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான தர்மசாலாவில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறைவான ரன் எடுத்தாலும் 28 ரன்கள் வித்தியாசத்தில் (CSK Won Against Punjab) வெற்றி பெற்றது. பல்வேறு காரணங்களால் இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களான முஸ்தாபிசுர் ரஹ்மான், பத்திரனா மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் இடம்பெறவில்லை. இதன் பின்னர் வேகப்பந்து வீச்சாளர் சிமர் ஜீத் சிங் Impact வீரராக களமிறங்கினார். சிஎஸ்கே அவரை களமிறக்குவதற்கு முக்கிய காரணம் அவரது வேகம்தான். மிக எளிதாக மணிக்கு 140 கிமீ வேகத்தில் பந்து வீசுவார். சில சமயங்களில் மணிக்கு 150 கிமீ வேகத்தில் பந்துவீசி எதிரணியை அச்சுறுத்தும் திறன் கொண்டவர்.

CSK Won Against Punjab :

மிகத் துல்லியமாக பந்துவீசிய அவர் 3 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரின் புதிய பந்துவீச்சால் அதிரடியால் ரன் குவித்து விடலாம் என நினைத்து ஏமாற்றம் அடைந்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாத நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே சிமர்ஜீத் சிங் முத்திரை பதித்துள்ளார். இந்தப் போட்டியில் முதல் பந்திலேயே ஜிதேஷ் சர்மாவை டக் அவுட் செய்தார். அடுத்து, பின்வரிசை வீரர் ஹர்ஷல் படேலும் ஒரு விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டியில் சிஎஸ்கே 167 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பஞ்சாப் கிங்ஸ் அணி எளிதாக வெற்றி பெறும் என பலரும் நினைத்தனர். ஆனால், பேட்டிங்கில் அந்த அணி தள்ளாடியது. இது போன்ற குறைந்த ஸ்கோர்கள் அடிக்கும் ஆட்டங்களில் பேட்ஸ்மேன்கள் புதிய பந்து வீச்சாளர்களை குறிவைத்து ரன்களை குவிப்பார்கள். ஆனால் சிமர்ஜீத் சிங்கின் ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணியால் ரன் குவிக்க முடியவில்லை. விக்கெட்டுகளையும் இழந்தது.

சிமர்ஜீத் சிங் :

இந்த போட்டியில் சிமர்ஜீத் சிங்கை கச்சிதமாக தேர்வு செய்து முன்னணி பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலையில் பீல்டிங் செய்து சிஎஸ்கே அணி வெற்றி (CSK Won Against Punjab) பெற்றது. சிஎஸ்கே அணியில் வரும் போட்டிகளில் சிமர்ஜீத் சிங் முக்கிய பந்துவீச்சாளராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply