Govt Plan To Increase Magalir Urimai Thogai - Platform Tamil

Govt Plan To Increase Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத் தொகையை உயர்த்த அரசு திட்டம்

கலைஞர் மகளிர் தொகையை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் (Govt Plan To Increase Magalir Urimai Thogai) வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தின் போது அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தன. குறிப்பாக, குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. திமுக வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்து பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் நிலையில் குடும்பத் தலைவிக்கான உரிமைத் திட்டம் மட்டும் தாமதமானது, ஆனால், இந்த திட்டம் கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி, தமிழக சட்டப்பேரவையில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது, ​​குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதையடுத்து, இத்திட்டத்திற்கான முதற்கட்ட நிதி வெளியிடப்பட்டு, பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் முதல்வர் ஸ்டாலினால் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என்று பெயரிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கலைஞர் மகளிர் உதவித்தொகை பெற தகுதியானவர்கள் பட்டியலையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகுதியான 1.7 கோடி குடும்பப் பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களது வாங்கி கணக்கில் மாதந்தோறும் 15ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத்தொகையானது வரவு வைக்கப்பட்டு வருகிறது.

Govt Plan To Increase Magalir Urimai Thogai :

இந்நிலையில், தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத் தொகையை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் (Govt Plan To Increase Magalir Urimai Thogai) வெளியாகியுள்ளன. அதன்படி, பெண்களுக்கான உரிமைத் தொகையாக ரூ.1,000க்கு பதிலாக ரூ.1,500 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்பெயின் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை திரும்பியதும் இது குறித்து அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்க வாய்ப்புள்ளதாகவும், வரும் பிப்ரவரி மாதம் பட்ஜெட் கூட்டத்தொடரில் பெண்களுக்கான உரிமைத் தொகை எவ்வளவு என்பது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், அரசின் மீதான அதிருப்தியை நீக்கி, பெண்களின் வாக்குகளைக் கவரும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்த, ஆளும் திமுக அரசு (Govt Plan To Increase Magalir Urimai Thogai) திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

Latest Slideshows

Leave a Reply