India's T20 World Cup Victory : இந்திய அணியின் அபார T20 உலகக்கோப்பை வெற்றி

இந்திய அணி ஜூன் 29, 2024 அன்று அமெரிக்காவில் உள்ள பார்படாஸில் நடந்த T20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை (India’s T20 World Cup Victory) பெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஆனது இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி T20 உலகக் கோப்பை 2024 பட்டத்தை வென்றுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதாக கொண்டாடி வருகின்றனர். வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்திய நாட்டின் பிரதமர் மோடி, குடியரசு தலைவர், மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

India's T20 World Cup Victory - T20 உலகக் கோப்பை 2024 விருது வென்றவர்கள் பட்டியல்

  1. போட்டியின் சிறந்த வீரர் மற்றும் போட்டியின் ஆட்டநாயகன் விருதை ஜஸ்பிரித் பும்ரா பெற்றார் (எட்டு இன்னிங்ஸ்களில் 15 விக்கெட்டுகளை 4.17 என்ற அற்புதமான எகானமி ரேட்டில் வீழ்த்தி உள்ளார்).
  2. விராட் கோலி இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை பெற்றார் (76 ரன்கள்).
  3. ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிக ரன்கள் பெற்றவர் விருதை பெற்றார் (281 ரன்கள்).
  4. சூர்யகுமார் யாதவ் இறுதிப் போட்டியின் ஸ்மார்ட் கேட்ச் பிடித்தவர் விருதை பெற்றார்.
  5. நிக்கோலஸ் பூரன் அதிகபட்ச ஸ்கோர் பெற்றார் (98 ரன்கள் எதிராக AFG).
  6. அர்ஷ்தீப் சிங் மற்றும் ஃபசல்ஹக் ஃபரூக்கி – அதிக விக்கெட்டுகள் பெற்றவர்கள் (தலா 17 விக்கெட்).
  7.  ஐடன் மார்க்ரம் – அதிக கேட்சுகள் பிடித்தவர் (8 கேட்ச்கள்).
  8.  நிக்கோலஸ் பூரன் – அதிக சிக்ஸர்கள் (17 சிக்ஸர்கள்).
  9.  ரோஹித் சர்மா மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் – அதிக 50+ ஸ்கோர் (தலா 3).
  10. ஷாய் ஹோப் – அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் (187.71).
  11. ஃபசல்ஹக் ஃபரூக்கி – சிறந்த புள்ளிகள் (5 க்கு 9 எதிராக உகாண்டா).

T20 உலகக் கோப்பை 2024 பரிசுத் தொகை விவரங்கள்

  • இந்தியா T20 உலகக் கோப்பை 2024 பரிசுத் தொகை INR 20.36 கோடி பெற்றது. மேலும் மூன்று குழு-நிலை ஆட்டங்களில் வென்றதற்காக INR 77.7 லட்சத்தை இந்தியா பெற்றுள்ளது.
  • தென்னாப்பிரிக்கா இரண்டாம் இடத்தைப் பிடித்து 7.33 கோடி ரூபாயை பெற்றுள்ளது.
  • முதல் நான்கு இடங்களை எட்டியதற்காக இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் 6.55 கோடி ரூபாயைப் பெற்றுள்ளன.
  • சூப்பர் 8 சுற்றுக்கு வரத் தவறிய போதிலும் 13 முதல் 20வது இடத்தைப் பிடித்த அணிகள் தலா 1.87 கோடி ரூபாய் சம்பாதித்தன.
  • போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றதற்காக பும்ரா USD 15000 சம்பாதித்தார். இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதற்காக விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பெரிய ரொக்கப் பரிசுகளை பெற்றனர்.

Latest Slideshows

Leave a Reply