Kalaignar Convention Centre : சென்னையில் கலைஞர் கன்வென்சன் சென்டர்...

Kalaignar Convention Centre :

சென்னையில் கலைஞர் கன்வென்சன் சென்டர் மிக பிரம்மாண்டமான முறையில் அமையவுள்ளது என முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்து உள்ளார். முதல்வர் ஸ்டாலினின் கலைஞர் கன்வென்சன் சென்டர் அறிவிப்பு ஆனது தமிழ்நாடு மக்கள் இடையே பெரும் வரவேற்பையும் மற்றும் மகிழ்ச்சியும் பெற்றுள்ளது.

சென்னை நந்தனத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நந்தனத்தில் இசை நிகழ்ச்சி 12.08.2023 அன்று  நடத்த இருந்தார்.  நந்தனத்தில் அவரின்  இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடந்து முடிந்து மாலை நிகழ்வு நடக்க இருந்தது.

ஆனால் சென்னையில் 12.08.2023 அன்று பிற்பகலில் இருந்து கனமழை பெய்து வந்தது. சென்னையில் எண்ணூர், தேனாம்பேட்டை வடபழனி, அண்ணா சாலை, திருவொற்றியூர் போன்ற பகுதிகளில் 2 மணி நேரமாக தொடர்ந்து கனமழை பெய்தது. லேசான மழை ஆனது மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் பெய்தது. வேளச்சேரி, எழும்பூர், தி நகர், ஆவடி போன்ற பிற பகுதிகளிலும் விடாமல் மழை பெய்தது. இதனால் சென்னையில் நடத்தப்பட இருந்த  ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டது.

கலங்கிய ஏ.ஆர் ரகுமான் அரசாங்கத்திடம் சமர்ப்பித்த கோரிக்கை :

இசை நிகழ்ச்சி  தடைப்பட்டது காரணமாக கலங்கிய  ஏ.ஆர்.ரகுமான், “சென்னை நந்தனத்தில் நடத்தப்பட இருந்த இசை நிகழ்ச்சியை மழை காரணமாக தள்ளி வைத்து உள்ளோம். கலை நிகழ்ச்சிகள், மெகா ஷோக்கள் மற்றும் சர்வதேச நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான சிறப்பான கட்ட உள்கட்டமைப்பை நாம் நமது அரசாங்கத்தின் உதவியுடன் உருவாக்குவோம் என்று நம்புகிறேன்” என்று தனது போஸ்டில் ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டு  இருந்தார். 

முதல்வர் ஸ்டாலின் இந்த கோரிக்கைக்கு பதில் அளித்து,  “இந்த கோரிக்கையை தமிழக அரசு விரைவில் நிறைவேற்றும்.  சென்னை ECR- இல் பெரிய வடிவ கச்சேரிகள், நிகழ்ச்சிகள், நிகழ்வுகள், கண்காட்சிகள் மற்றும் மாநாடுகளை நடத்தக்கூடிய உலகத்தரம் வாய்ந்த #KalaignarConventionCentre ஆனது  நிறுவப்படும். அந்த Kalaignar Convention Centre ஆனது இயற்கையான சூழ்நிலையில், ஹோட்டல்கள், உணவு விடுதிகள், பார்க்கிங் வசதிகளுடன்  நகரத்தின் புதிய கலாச்சார சின்னமாக இருக்கும்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது உதயமான எண்ணம் வடிவம் பெறுகிறது :

முதல்வர் ஸ்டாலினின்  சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுப்பயணத்தின் போது  உதயமான இந்த எண்ணம்  இப்போது  வடிவம் பெறுகிறது. இந்த மையம் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, “சென்னையில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு மையம் ஆனது  25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 5 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வகையில் கருணாநிதி பெயரில் அமைக்கப்படும் என்றும் உலகில் பல நாடுகளில் இருப்பது போல நட்சத்திர தங்கும் விடுதிகள், உணவகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மிக பிரமாண்ட உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கமாக அது அமையும்” எனத் தெரிவித்து இருந்தார். 

அந்த பன்னாட்டு அரங்கத்தில் மிக பிரம்மாண்டமான முறையில்  உலகளாவிய தொழில் கண்காட்சிகள், திரைப்பட நிகழ்வுகள், பன்னாட்டு மாநாடுகள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும்  சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுப்பயணத்தின் போது தனக்கு இந்த எண்ணம் உதயமானது என்றும் மொத்தம் 5 ஆயிரம்  பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் மிக பிரம்மாண்டமான முறையில் இந்த கலைஞர் கன்வென்சன் சென்டர் அமையும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார்.

இந்த கோரிக்கை பல காலமாக அரசாங்கத்திடம் வைக்கப்பட்டு வந்த நிலையில், அதை நிறைவேற்றும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மக்கள் மற்றும் கலைஞர்களின் பல வருட ஏக்கம் மற்றும்  கனவு நிறைவேற போகிறது.

Latest Slideshows

Leave a Reply