Mini Tidel Park At Villupuram - மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்

விழுப்புரம் திருச்சிற்றம்பலத்தில் மினி டைடல் பூங்காவை (Mini Tidel Park At Villupuram) மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் :

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், திருச்சிற்றம்பலம் கிராமத்தில் அமைந்துள்ள மினி டைடல் பூங்காவை (Mini Tidel Park At Villupuram) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக 17/02/2024 அன்று திறந்து வைத்தார். திருச்சிற்றம்பலத்தில் உள்ள இந்த மினி டைடல் பூங்கா ஆனது சுமார் 500 தகவல் தொழில் வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் 31 கோடி ரூபாய் செலவில் 63,000 சதுரஅடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை ராஜீவ் காந்தி சாலையில் முத்தமிழறிஞர் கலைஞரின் தொலைநோக்குப் பார்வையில் அமைக்கப்பட்ட டைடல் பூங்கா (Tidel Park), தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பப் புரட்சி ஆனது ஏற்பட அடித்தளமாக அமைந்தது. 2021-2022ஆம் ஆண்டிற்கான திருத்த நிதிநிலை அறிக்கையில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மாநிலம் முழுவதும் பரவலாக அமைவதை உறுதி செய்திட, முதற்கட்டமாக விழுப்புரம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 24.06.2022 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, திட்டப்பணிகள் குறுகிய காலத்திலேயே நிறைவடைந்து இந்த மினி டைடல் பூங்கா 17/02/2024 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கது ஆகும். 17/02/2024 அன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், டைடல் நியோ லிமிடெட் மூலமாக விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை (Mini Tidel Park At Villupuram) காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த மினி டைடல் பூங்கா ஆனது சுமார் 500 தகவல் தொழில் வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் 31 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் 63,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது

விழுப்புரம் இளைஞர்களுக்கு பெருகும் வேலைவாய்ப்பு :

இந்த மினி டைடல் பூங்கா மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் (Mini Tidel Park At Villupuram) உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் மாவட்டத்தின் சமூக பொருளாதாரமும் மேம்படும். இந்த மினி டைடல் பூங்கா ஆனது தரை மற்றும் நான்கு தளங்களுடன், குளிர்சாதன வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு, மின்தூக்கிகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள், தீ பாதுகாப்பு, கட்டட மேலாண்மை, மின் விளக்குகளுடன் கூடிய உட்புற சாலை, 24×7 பாதுகாப்பு, உணவகம் மற்றும் உடற்பயிற்சிக்கூடம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் இந்நிகழ்ச்சியின்போது, இந்த மினி டைடல் பூங்காவின் முதலாவது இடஒதுக்கீட்டு ஆணையை SUV Startup Space நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்.யுவராஜிடம் வழங்கினார். 17/02/2024 நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Latest Slideshows

Leave a Reply