Nandini's T20 World Cup Sponsor - சர்வதேச அரங்கில் Nandini Brand-டை அறிமுகம் செய்ய நல்ல வாய்ப்பு

Karnataka Milk Federation (KMF) :

தமிழ்நாட்டின் ஆவின் நிறுவனம் போல, Karnataka Milk Federation (KMF) என்பது கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வரும் மாநில பால் உற்பத்தி கூட்டமைப்பு ஆகும். இந்த நிறுவனத்தை கர்நாடக மாநில அரசு நிர்வகித்து வருகிறது. KMF ஆனது வர்த்தக ரீதியில் நந்தினி (Nandini) என்ற பெயரில் தான் தயாரிக்கும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

சர்வதேச அளவில் நந்தினி பால் நிறுவனத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது :

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் KMF ஆனது கிளைகளை விரித்து நந்தினி (Nandini) என்ற பெயரில் விற்பனை செய்து வருகின்றது. சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நந்தினி பால் விற்பனையகம் உள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை தாண்டி, மத்திய கிழக்கு நாடுகளிலும், சிங்கப்பூரிலும் மற்றும் துபாயிலும் தங்களது நிறுவன கடைகளை திறந்துள்ளது. தற்போது ஷார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய இரண்டு நகரங்களில் கடைகளை திறக்க முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் தங்களது நிறுவன இனிப்புகள் விற்பனை கடைகளை திறந்து கால் தடம் பதித்து விட முடிவு செய்துள்ளது.

நந்தினி நிறுவனத்திற்கும் மற்றும் அமுல் நிறுவனத்திற்கும் சந்தையில் கடும் போட்டி :

நந்தினி நிறுவனத்திற்கும் மற்றும் அமுல் நிறுவனத்திற்கும் சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது. அமுல் நிறுவனம் ஆப்கானிஸ்தான் அணிக்கு ஸ்பான்சராக செயல்பட்ட நிலையில், தற்போது நந்தினியும் கிரிக்கெட் ஸ்பான்சர்ஷிப்பில் (Nandini’s T20 World Cup Sponsor) இறங்கியுள்ளது. கர்நாடக அரசின் நந்தினி பால் நிறுவனம் வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு ஸ்பான்சர் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

Nandini's T20 World Cup Sponsor - Nandini Splash என்ற எனர்ஜி டிரிங் அறிமுகப்படுத்த உள்ளது :

T20 உலகக் கோப்பையை முன்னிட்டு  Nandini Splash என்ற எனர்ஜி டிரிங் அறிமுகப்படுத்த உள்ளது. ICC T20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்கும் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு கர்நாடகாவைச் சேர்ந்த நந்தினி தான் ஸ்பான்சர் (Nandini’s T20 World Cup Sponsor) செய்கிறது. இந்த 2 கிரிக்கெட் அணிகள் 4 போட்டிகளில் விளையாட உள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 20 அணிகள் பங்கேற்கவுள்ளன.

KMF-ன் நிர்வாக இயக்குனரான எம்.கே.ஜெகதீஷ் உரை :

கர்நாடக பால் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனரான எம்.கே.ஜெகதீஷ், “வெளிநாட்டு அணிக்கு எப்படி ஸ்பான்சர் செய்யலாம் என சர்ச்சை எழுந்துள்ளது. சர்வதேச அரங்கில் நந்தினி பிராண்டை அறிமுகம் செய்ய மற்றும் விரிவுபடுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு. நந்தினி உலக கோப்பை கிரிக்கெட்டில் ஸ்காட்லாந்து,  மற்றும் அயர்லாந்து ஆகிய இரு அணிகளுக்கும் ஸ்பான்சர் செய்ய திட்டமிட்டுள்ளது. இரண்டு அணிகளின் போட்டியின் போது நந்தினியின் பிராண்ட் மைதானத்தில் தெரியும்படி விளம்பரப்படுத்தப்படும். சர்வதேச அளவில் நந்தினி பால் நிறுவனத்தை மேலும் விரிவுபடுத்த மற்றும் இந்த உலகம் முழுவதும் கொண்டுச் செல்ல எனர்ஜி டிரிங் ஒன்றை இங்கு நந்தினி அறிமுகப்படுத்த உள்ளது. சர்வதேச அளவில் நந்தினி பால் நிறுவனத்தை மேலும் விரிவுபடுத்த டி20 உலகக்கோப்பை தொடரில் கிரிக்கெட் வீரர்களுடன் போட்டோஷூட் நடத்தி  சமூக வலைதளங்களில் ஏராளமான விளம்பரங்களை அளிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த  விளம்பரங்கள் உலகம் முழுவதும் கொண்டு செல்லப்படும்” என்றார்.

Latest Slideshows

Leave a Reply