Online Patta Transaction : இனி ஆன்லைன் மூலமாகவே பட்டா வாங்கலாம்

பட்டா இல்லாத வீடு வைத்திருப்பவர்கள் இனி ஆன்லைன் மூலமாகவே பட்டா வாங்கலாம் :

தமிழ்நாடு அரசு ஆனது நில மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் தற்போது தமிழ்நாடு அரசு ஆனது சர்வே எண்ணை வைத்து அந்த நிலம் யார் பெயரில் பதிவாகி உள்ளது, அந்த நிலம் எவ்வளவு பரப்பளவு கொண்டதாக இருக்கிறது மற்றும் நிலத்திற்கான வரைபடம் என அனைத்து விஷயங்களையும் மக்கள் ஈசியாக தெரிந்து கொள்ளும் வகையில் Online இணையதள வசதியை (Online Patta Transaction) ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக ஒரு நிலம் வாங்கும் முன்பே பிரச்சனைகள் எதுவும் இருக்கின்றதா என்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியம் ஆகும். நிலத்தில் முதலீடு செய்பவர்கள் பலரும் தங்கள் மொத்த வாழ்நாள் சேமிப்பை கொண்டு நிலத்தில் முதலீடு செய்வார்கள். அதனால் அவர்கள் காலி மனை வாங்கும்போது தாய்ப்பத்திரம் மற்றும் ஒரிஜினல் இருக்கிறதா என்று சரிபார்க்க வேண்டும். பட்டா இல்லாத எந்த நிலத்தையும் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு பதிவுத்துறை ஆனது காலி மனை பத்திரங்களை பதிவு செய்வதற்காக, முறைப்படி கள ஆய்வு எதுவுமே மேற்கொள்வதில்லை. அதனால் சில சமயங்களில் காலி மனை என்று குறிப்பிட்டு தாக்கலாகும் பத்திரங்களிலும், கட்டிடங்கள் இருப்பது மறைக்கப்பட்டு இருக்கும். நாம் எந்த இடத்தை வாங்க முடிவு செய்தாலும், அந்த இடத்திற்கான 30 வருட வில்லங்க சான்றிதழை சரிப்பார்த்து வாங்க வேண்டும். குறிப்பிட்ட அந்த சொத்தின் உரிமையாளர் யார் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் இதுவாகும். மேலும் வாங்கப்போகும் நிலம், யார் வசம் இருந்து கைமாறி வந்துள்ளது, வாங்க நினைக்கும் காலி மனை ஆனது வாரிசு பெயரில் இருக்கிறதா மற்றும் வேறு யார் பெயரில் இருக்கிறதா என்ற அனைத்து விவரங்களையும் வில்லங்க சான்றிதழ் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Online Patta Transaction - தமிழ்நாடு அரசு பட்டா வழங்கும் முறை :

  • தமிழ்நாடு அரசு பட்டா வழங்கும் போது ஆட்சேபனையற்ற இடம் என்றால் ஒரு குறிப்பிட்ட சதுர அடிக்கு மட்டும் இலவச பட்டா வழங்கும்.
  • அந்த குறிப்பிட்ட சதுர அடியை தாண்டி அதிகமாக இருப்பதற்கு தமிழ்நாடு அரசு ஆனது வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் விலை நிர்ணயித்து அதற்கான தொகையை வசூலிக்கும்.
  • முறையான அரசு நிலங்களில் குடியிருப்போர் எளிதாக பட்டா வாங்க முடியும். அதாவது நந்தவனம், அனாதீனம், தண்ணீர் பந்தல், மண்டபம், மானாவாரி தரிசு, சர்வே செய்யப்படாத இடங்கள், சாவடி, நத்தம், கலவை, தோப்பு, கல்லாங்குத்து, காடு/பாறை, மலை, கல்லாங்குத்து, மைதானம், திடல், வெட்டுகுழி மற்றும் தீர்வை விதிக்கப்பட்ட மானாவாரி தரிசு போன்ற நிலங்கள் ஆகும்.
  • தெரு, மயானம்/ சுடுகாடு, கோவில், சாலை, மற்றும் நீர்வழிப்பாதை நிலங்களுக்கு பட்டா வழங்க மாட்டார்கள்.
  • எந்த வகையான அரசு நிலங்களுக்கும் பட்டா வழங்க மாட்டார்கள்.

தமிழக அரசு வில்லேஜ் மாஸ்டர் இணையதளத்தை அறிமுகம் செய்து உள்ளது :

  • தமிழ் நிலம் என்ற திட்டத்தின் கீழ் https://tngis.tn.gov.in/apps.html# – Dashboard என்ற வில்லேஜ் மாஸ்டர் இணையதளத்தை (Online Patta Transaction) தமிழக அரசு அறிமுகம் செய்து உள்ளது.
  • வீடு, நிலத்திற்கான சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண்ணை கூகூள் மேப் போன்று அதில் உள்ள வரைபடம் வழியாக மிக ஏளிதாக அறிந்து கொள்ள முடியும்.
  • அந்த சர்வே எண்ணை https://eservices.tn. gov.in/ என்ற வெப்சைட்டில் பதிவு செய்து அந்த நிலத்தின் உரிமையாளர், நில அளவுகள் மற்றும் நிலத்தின் தன்மைகளை நாம் அறிந்து கொள்ள முடியும்.
  • தற்போது கிராமப்புறங்களில் உள்ள வீடு மற்றும் நிலங்களில் உள்ள சர்வே எண் மட்டுமே இந்த வெப்சைட்டில் உள்ளது. சிட்டிக்களில் உள்ள இடங்களுக்கு இன்னும் கொண்டு வரப்படவில்லை.
  • நிலம் வாங்குவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் பலரும் தங்கள் மொத்த வாழ்நாள் சேமிப்பை நிலத்தில் முதலீடு செய்வார்கள். எனவே, வாங்கும் நிலத்தில் ஏதேனும் வில்லங்கங்கள் இருந்தால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவார்கள்.

Latest Slideshows

Leave a Reply