Purchase Deed Change At Just Rs 1000 : சொத்து வாங்குவோர் மற்றும் விற்போர் மகிழ்ச்சி

பத்திரப்பதிவில் முன்பு இருந்த நடைமுறை அடியோடு மாறி உள்ளது :

சொத்து வாங்குவோர் மற்றும் விற்போர் மகிழ்ச்சி அடையும் விதத்தில் வெறும் ரூ.1000-ல் கிரைய பத்திரம் மாற்றம் நடைமுறை (Purchase Deed Change At Just Rs 1000) படுத்தப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு அலுவலகத்தில் முன்பு இருந்த நடைமுறை மாறி புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்திருப்பதாக தமிழக பத்திரப்பதிவு துறை தனது அறிவிப்பில் கூறியுள்ளது. தற்போது ஒருவர் ரூபாய் 1000 செலுத்தி தான் பதிவு செய்த கிரைய பத்திரத்தை ரத்து செய்தால், சொத்து விற்பனை செய்தவர் பெயருக்கே மீண்டும் அந்த சொத்து ஆனது சென்று விடும்.

பழைய கிரைய பத்திர நடைமுறை :

தமிழக அரசு ஒரு நிலம்-வீடு என எந்த சொத்து வாங்கினாலும், அந்த பதிவுக்கு முத்திரைத்தாள் கட்டணம் 7 சதவீதமும், பதிவு கட்டணம் 2 சதவீதமும் என மொத்தம் 9 சதவீதம் அளவிற்கு கட்டணத்தை வசூலிக்கிறது. ஒரு இடம் அல்லது வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு அல்லது தோட்டம் அல்லது வணிக வளாகம் என எந்த வகையான சொத்துக்களை வாங்கினாலும், முத்திரைத்தாள் கட்டணம் 7 சதவீதமும், பதிவு கட்டணம் 2 சதவீதமும் என மொத்தம் 9 சதவீதம் அளவிற்கு கட்டணத்தை அந்த சொத்து அமைந்துள்ள பகுதியின் அருகில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று செலுத்தி கிரைய பத்திரமாக பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும்.

இப்படி ஒரு பத்திரத்தை கிரையம் முடித்தவர்கள், மீண்டும் அந்த கிரையத்தை ரத்து செய்யவும் நமது சட்டத்தில் இடமிருக்கிறது. அப்படி ஒரு பத்திரத்தை ரத்து ஏதோ ஒரு காரணத்திற்காக செய்ய விரும்பினால், இருதரப்பும் சேர்ந்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் இந்த ரத்து ஆவணம் மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். ஒரு பத்திரத்தை ரத்து செய்வதற்கு ரூ.50 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் கிரையப் பத்திரத்தை ரத்து செய்யும் போது, ‘இந்த ரத்து ஆவணத்தின் மூலம் உரிமை மாற்றம் ஏற்படாது’ என்று ஒரு முத்திரை ஆனது வழக்கமாக குத்தப்படும். அதாவது இந்த ரத்து ஆவணம் செய்த பின்பும் புதிதாக சொத்து வாங்கியவர்கள் பெயரிலேயேதான் அந்த சொத்து ஆனது இருக்கும்.

இதனால் ஒரு பத்திரத்தை கிரைய ரத்து செய்வதால் எந்த பலனும் இல்லாத நிலை இருந்து வந்தது. அதாவது கிரையப் பத்திரத்தை ரத்து செய்வதால், அதன் உரிமை மாறாது. அதாவது, ஒரு பத்திரத்தை கிரைய ரத்து செய்த பின்பும் சொத்தை வாங்கியவரின் பெயரிலேயேதான் அந்த சொத்து இருக்கும். அந்த சொத்து மீண்டும் பழைய உரிமையாளரின் பெயருக்கு மாறாது. இதன் காரணமாக பெரும்பாலானோர் கிரைய ரத்து ஆவணம் செய்வதற்கு பதில் மீண்டும் புதிதாக ஒரு கிரைய ஆவணம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது. அதாவது ரத்து செய்தவர்கள் பத்திரப்பதிவு அலுவலகத்தில் மீண்டும் 9% பத்திரப்பதிவு கட்டணத்தை செலுத்தி தங்கள் பெயருக்கு மீண்டும் பத்திரத்தை கிரையம் செய்ய வேண்டும்.

Purchase Deed Change At Just Rs 1000 - புதிய கிரைய பத்திர நடைமுறை :

தற்போது தமிழக பத்திரப்பதிவு துறை கிரையப் பத்திர ரத்து நடைமுறையில் கொண்டு வந்துள்ள புதிய நடைமுறையின்படி, கிரையப் பத்திரத்தை ரத்து செய்யும் போது, ‘இந்த ரத்து ஆவணத்தின் மூலம் உரிமை மாற்றம் ஏற்படாது’ என்ற முத்திரை ஆனது குத்தப்படாது. தமிழக பத்திரப்பதிவு துறையின் இந்த புதிய நடைமுறை மூலம் ஏற்கனவே சொத்து விற்பனை செய்தவர் பெயருக்கு மீண்டும் அந்த சொத்து சென்று விடும். இந்த நடைமுறை மூலம் ரத்து ஆவணத்துக்கு ரூ.1,000 மட்டுமே கட்டணம் (Purchase Deed Change At Just Rs 1000) செலுத்த வேண்டும். இந்த கிரைய பத்திர ரத்து நடைமுறையில் ஏற்பட்டுள்ள புதிய நடைமுறை மாற்றம் ஆனது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply