Q1 2024 Real Estate Investment Report : மொத்த Real Estate முதலீட்டில் Residential Segment 63%

Q1 2024 Real Estate Investment Report - Residential Segment Contribution 63%

ஆலோசனை நிறுவனமான Cushman & Wakefield மே 1 அன்று Q1 2024 அறிக்கை வெளியிட்டுள்ளது. மொத்த ரியல் எஸ்டேட் முதலீட்டில் இந்த 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் Residential Segment 63% பங்களித்துள்ளதாக Q1 2024 அறிக்கை (Q1 2024 Real Estate Investment Report) கூறுகிறது (குடியிருப்பு சொத்துக்களில் 63% முதலீடு செய்யப்பட்டுள்ளது). இந்த முதலீட்டு தொகையானது இதற்கு முந்தைய எட்டு காலாண்டுகளில் குடியிருப்பு சந்தையில் பதிவான சராசரி காலாண்டுத் தொகையை விட இரு மடங்கு அதிக முதலீட்டு தொகையாக வந்துள்ளது. 

இந்த 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் முதல் எட்டு நகரங்களில் பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, மும்பை, டெல்லி-என்சிஆர், கொல்கத்தா, புனே மற்றும் அகமதாபாத் ஆகியவை அடங்கும். இதில் 25.6 சதவீத பங்குடன் சிறந்த இந்திய சந்தைகளில் பெங்களூரு ஆனது முதலீட்டில் முன்னிலை வகிக்கிறது. புனே ஆனது முதலீட்டில் 14 சதவீத பங்குடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. குடியிருப்புத் துறையில் போடப்பட்ட பணத்தில் சுமார் 48 சதவிகிதம் ஆனது முதல் எட்டு நகரங்களில் உள்ள கட்டுமானத்தின் முதல் கட்ட திட்டங்களுக்குச் சென்றுள்ளது.

இது முதலீட்டாளர்களின் வலுவான விருப்பம் மற்றும் நகரங்களில் உள்ள குடியிருப்பு சொத்துக்களின் மூலதன மதிப்புகளில் நிலையான அதிகரிப்பு ஆனது வளர்ந்து வருவதைக் குறிக்கிறது. அதே நேரத்தில் கடன் முதலீடுகள் ஆனது கடந்த எட்டு காலாண்டுகளின் காலாண்டு சராசரி அளவை விட இரண்டு மடங்காக அதிகரித்து உள்ளன. மேலும் கிட்டத்தட்ட அனைத்து கடன் முதலீடுகள் ஆனது  குடியிருப்புத் துறையை நோக்கி செலுத்தப்பட்டுள்ளன. இந்த 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மொத்தமாக ரூ.4,701.1 கோடி நிதி திரட்டும் செயல்பாடுகள் ஆனது நடந்துள்ளதாகவும், அந்த ரூ.4,701.1 கோடி மொத்தத்தில் 93 சதவீதத்தை உள்ளடக்கிய நிதி திரட்டும் செயல்பாடுகள் ஆனது குடியிருப்புப் பிரிவினரால் இயக்கப்பட்டதாகவும் அறிக்கை கூறியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply