Sahitya Akademi's Yuva Puraskar Award : சாகித்ய அகாடமியின் ‘யுவ புராஸ்கர்’ விருதை தையல்காரர் தேவிதாஸ் வென்றார்

இலக்கியத்திற்கு சேவை புரியும் இளையோருக்கு வழங்கப்படும் சிறந்த விருது சாகித்ய அகாடமியின் ‘யுவ புராஸ்கர்’ விருதாகும். 2024வது வருடத்திற்கான யுவ புராஸ்கர் விருது பெற்றவர்களின் பட்டியல் ஆனது சமீபத்தில் வெளியிடப்பட்டது. தமிழில் “விஷ்ணு வந்தார்” என்ற சிறுகதைக்காக லோகேஷ் ரகுராமன் “யுவ புராஸ்கர்” விருது பெற்றுள்ளார். மராத்தியில் “உஸ்வான்” என்ற நூலிற்காக தேவிதாஸ் சுதாகர் “யுவ புராஸ்கர்” விருது (Sahitya Akademi’s Yuva Puraskar Award) பெற்றுள்ளார். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் இந்த தேவிதாஸ் சுதாகர் இலக்கியவாதிகளின் வட்டத்திற்குள் இல்லாதவர். அதாவது இவர் ஒரு  தையல்காரர்.

Sahitya Akademi's Yuva Puraskar Award - சாகித்ய அகாடமி ‘யுவ புராஸ்கர்’ விருதை வென்ற தையல்காரர் :

தடைகளை தாண்டி சாதித்த மராத்தி தையல்காரர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.  தேவிதாஸ் சுதாகர் இந்த உஸ்வான் என்ற நூலில் பாதிப்படைந்து வரும் தையல்தொழிலுக்கும் மற்றும் ரெடிமேட் ஆடைகளுக்கும் இடையே உள்ள சம்பவங்களை மையமாக வைத்து ஒரு தையல் தொழிலாளி படும் சங்கடங்களை அடிப்படியாக வைத்து எழுதியுள்ளார். தேவிதாஸ் சுதாகர் இளமையில் கண்ட வறுமையால் அவரது பள்ளிப்படிபானது 7வது வரையில் நின்றுவிட்டது. இவரது தந்தை மற்றும் இவரது தாத்தா இருவரும் விவசாய கூலித்தொளிலாளிகள் ஆவர். இவர்கள் இருவருக்கும் சிலநேரங்களில் வேலை இருக்கும் மற்றும் பல நேரங்களில் வேலை இருக்காது. ஆகவே, இவர் வறுமை காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு பகல்நேரத்தில் வாட்ச்மேனாக வேலை செய்து வந்துள்ளார். இருந்தபோதும் இவர் ஏதாவது ஒரு டிகிரியாவது வாங்கவேண்டும் என்ற எண்ணத்தில் மாலை நேர பள்ளியில் சேர்ந்து தனது படிப்பைத் தொடர்ந்துள்ளார்.

இவரது தந்தைக்கு கூலி வேலை தொடர்ந்து கைக்கொடுக்காததால், சொந்தமாக தையல் இயந்திரம் வாங்கி தையல் வேலை செய்து வருகிறார். தனது தந்தைக்கு உதவியாக தேவிதாஸ் சுதாகரும் தையல் தொழிலில் உதவி செய்து வருகிறார். அதே நேரத்தில் இவர் எழுதுவதை பொழுதுபோக்காக கொண்டுள்ளார். இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்ததும் ITI பாலிடெக்னிக்கில் சேர்ந்து மோட்டார் மெக்கானிக்கல் படிப்பை முடித்தார். ஆனால் இவரது மெக்கானிக்கல் படிப்பிற்கான வேலை ஆனது இவருக்கு கிடைக்கவில்லை. எனவே இவர் தனது தந்தையின் தொழிலான தையல் வேலையை செய்து வருகிறார். படிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தில் இவர் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் MA வரலாறு படித்து முடித்துள்ளார். 18வது வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்த  இவர் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் கிராமத்தில் இருக்கும் நூலகத்திற்கு சென்று அங்கிருக்கும் புத்தகங்களை படித்து வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

இவர் எழுதிய “உஸ்வான்” என்ற நூலை எந்த பதிப்பகத்தாரும் புத்தகமாக வடிவமைக்க முன்வரவில்லை. இவர் தானே சொந்தமாக 8000 ரூபாய் செலவில் 200 புத்தகம் போட்டு அதில் சில புத்தகங்களை தனக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இவர் எழுதிய புத்தகத்தை மராத்தியில் மிகப்பிரபல எழுத்தாளர் ஒருவர் பாராட்டியதுடன் புத்தகத்திற்கான தொகை ரூ.100-யும் இவருக்கு அனுப்பி வைத்துள்ளார். தற்பொழுது இவரது உஸ்வான் நாவலுக்கு நல்ல அங்கீகாரமாக மிகப்பெரிய சாகித்ய அகாடமியின் ‘யுவ புராஸ்கர்’ விருது (Sahitya Akademi’s Yuva Puraskar Award) கிடைத்திருக்கிறது. இப்பொழுது வேலையில்லா பட்டதாரி இளைஞர்களைப் பற்றி இவர் நாவலை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Latest Slideshows

Leave a Reply