Vanangaan First Look : பாலாவின் 'வணங்கான்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Vanangaan First Look :

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடித்து வரும் ‘வணங்கான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (Vanangaan First Look) வெளியாகியுள்ளது.

சேது, பிதாமகன், அவன் இவன், நான் கடவுள், நந்தா, பரதேசி, நாச்சியார், தாரை தப்பட்டை உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருது பெற்ற பாலா, தனக்கே உரிய பாணியில் தனி இயக்குனராக வலம் வருகிறார். கலைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் இவரது படைப்புகள் சினிமா உலகில் தனித்துவமாக பார்க்கப்படுகிறது. நடிகர்களை கதாபாத்திரத்திற்கு ஏற்ப வாழ வைப்பதில் பாலாவுக்கு நிகரானவர் அவர் தான் என்ற அளவில் படத்தின் காட்சிகளை செதுக்கி விடுவார். பாலாவிடம் வேலை கிடைப்பது கடினம் என்று ஒதுங்கிய நடிகர்களும் உண்டு. ஆனால், பிதாமகன் படத்தின் மூலம் விக்ரமுக்கு தேசிய விருது வாங்கித் தந்த பெருமை பாலாவையே சாரும். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலா இயக்கும் ‘வணங்கான்’ படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதுவும் பாலாவுடன் மீண்டும் சூர்யா நடிக்கவிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

ஆனால், சில காரணங்களால் வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகுவதாகவும், அவரது நன்மைக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாலாவே அறிக்கை வெளியிட்டார். அடுத்த ஹீரோ யார் என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் வணங்கான் படத்தில் இணைந்துள்ளார் அருண் விஜய். வித்தியாசமான கதையாலும், அற்புதமான நடிப்பாலும் திரைக்கு வரவிருக்கும் பாலாவின் வணங்கான் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் பி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் வணங்கான் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் மிஷ்கின் முக்கியமான காட்சிகளில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

வணங்கான் படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மற்றும் திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். படத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (Vanangaan First Look) வெளியாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அருண்விஜய், உடல்முழுவதும் சகதியுடன் வலது கையில் பெரியார் சிலையும் இடது கையில் விநாயகர் சிலையும் வைத்திருக்கிறார். இந்த போஸ்டர் (Vanangaan First Look) தற்போது சமுகம் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply