சென்னையில் மே 25-ல் Viduthalai Siruthaigal Katchi Viruthu Vizha

2007 முதல் ஒவ்வொரு வருடமும்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆனது தமிழகம் மற்றும் இந்திய அளவில் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த நபர்களுக்கு விருதுகள் (Viduthalai Siruthaigal Katchi Viruthu Vizha) வழங்கிச் சிறப்பித்து வருகிறது. குறிப்பாக கலை, இலக்கியம், சமூகம், அரசியல் மற்றும் பண்பாடு போன்ற தளங்களில் சிறப்பாக பணியாற்றும் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளுக்கு அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதே மில்லத் பிறை, செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருதுகள் ஆனது 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் இதுவரை கலைஞர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தாரமையா, தி.க தலைவர் கி.வீரமணி, சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட பலருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் (Viduthalai Siruthaigal Katchi Viruthu Vizha) வழங்கப்பட்டுள்ளன.

Viduthalai Siruthaigal Katchi Viruthu Vizha - தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2024 ஆம் ஆண்டுக்கான விருதுகள் பெறுவோரின் பட்டியலை வெளியிட்டுள்ளது :

இந்த 2024 ஆம் ஆண்டுக்கான விருது  விவரங்கள்,

  • பெரியார் ஒளி விருதினை திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் அருள்மொழி பெறுகிறார்.
  • மார்க்ஸ் மாமணி விருதினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் பெறுகிறார்.
  • அம்பேத்கர் சுடர் விருதினை திரைப்படக் கலைஞரும் மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் சமுதாயத்தில் போராடி வரும் நடிகர் பிரகாஷ் ராஜ் பெறுகிறார்.
  • காமராசர் கதிர் விருதினை பேராயர் எஸ்றா சற்குணம் பெறுகிறார்.
  • அயோத்திதாசர் ஆதவன் விருதினை பேராசிரியர் ராஜ் கௌதமன் பெறுகிறார்.
  • காயிதேமில்லத் பிறை விருதினை வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா முன்னாள் மாநிலத் தலைவர் எஸ்.என்.சிக்கந்தர் பெறுகிறார்.
  • செம்மொழி ஞாயிறு விருதினை கல்வெட்டியல் அறிஞர் எ.சுப்பராயலு பெறுகிறார்.

திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் அருள்மொழிக்கு பெரியார் ஒளி விருதினை (Viduthalai Siruthaigal Katchi Viruthu Vizha) வழங்குவதில் பெருமைப்படுகிறோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் வரும் மே 25 ஆம் தேதியன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விருதுகள் வழங்கும் விழா (Viduthalai Siruthaigal Katchi Viruthu Vizha) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply