Vijay Party Name Correction : விஜய்யின் கட்சி பெயரில் திடீர் மாற்றம்

விஜய் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயரிட்டு, தேர்தல் ஆணையத்தில் பெயரைப் பதிவு செய்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடப் போவதாகக் கூறியுள்ளார். மேலும், விஜய்யின் கட்சி பெயரில் இலக்கண பிழை இருப்பதாக பலரும் கூறி வரும் நிலையில், இது தொடர்பாக விஜய் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் (Vijay Party Name Correction) வெளியாகியுள்ளது.

புதிய கட்சி :

விஜய் மக்கள் இயக்கம் சமீபகாலமாக அரசியல் நிகழ்வுகளில் அதிக ஆர்வம் காட்டி வந்தது. நடிகர் விஜய்யும் பல்வேறு அணி நிர்வாகிகளுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி இயக்கம் சார்பில் பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வந்தார். சென்னை, பனையூரில் உள்ள அலுவலகத்தில், மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை கூட்டிய விஜய், மாவட்ட நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் விஜய் புதிய கட்சி தொடங்க உள்ளதாகவும், அவர் கட்சி தலைவராக செயல்படுவார் என்றும் தகவல் வெளியானது.

இதையடுத்து பிப்ரவரி 2 ஆம் தேதி, இந்திய தேர்தல் ஆணையத் தலைமையகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சிக்கு பெயரிட்டார். அதன்படி விஜய்யின் கட்சி பெயர் “தமிழக வெற்றி கழகம்” என தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் என்ற முறையில் நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டார். “தமிழ்நாட்டு மக்களுக்கு என்னால் முடிந்தவரை முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால நோக்கம்” என்று தெரிவித்திருந்தார். மேலும் தமிழக மக்களுக்காக நமது அரசியல் பயணம் தொடங்கும் என்றும், முழு அரசியலில் ஈடுபட்ட பிறகு சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

Vijay Party Name Correction :

விஜய்யின் அரசியல் பிரவேசம் மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மறுபக்கம் குற்றச்சாட்டுகளும் கேலியும் வருகிறது. ஒரு தரப்பினர் கட்சியின் பெயரில் தவறை சுட்டிக்காட்டி கேலி செய்கின்றனர். இன்னும் சொல்லப்போனால், விஜய்யின் கட்சிப் பெயரில் வெற்றி என்ற வார்த்தைக்கு அருகில் ‘க்’ விடுபட்டிருப்பது எழுத்துப் பிழை. இதனை பலர் முதல் நாளிலேயே இணையத்தில் பதிவிட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.

விஜய்யின் முடிவு :

Vijay Party Name Correction : இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்திற்கு ‘க்’ வருமா வராதா என்ற விமர்சனங்கள் தொடர்ந்து வருவதால், அதை ஏற்கும் வகையில் கட்சியின் பெயரில் ‘க்’ என்ற எழுத்தை பயன்படுத்த வேண்டும் என அக்கட்சியின் தலைவர் விஜய் கூறியதாக செய்திகள் (Vijay Party Name Correction) வெளியாகியுள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கட்சி தொடங்கிய நாளில் இருந்தே இலக்கண பிழை இருப்பதாக எழுந்த சர்ச்சைக்கு இதன் மூலம் விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply