Weapon Movie Review : வெப்பன் திரைப்படத்தின் திரை விமர்சனம்

ஒரு சூப்பர் மனிதனான சத்யராஜ், ஜெயிலர் பட வெற்றிக்கு பிறகு வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ள வெப்பன் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ள நிலையில், தற்போது படத்தின் விமர்சனத்தை காணலாம். இயக்குனர் குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி முக்கிய வேடங்களில் நடித்து திரையரங்குகளில் (Weapon Movie Review) வெளியாகியுள்ள படம் ‘வெப்பன்’ ஆகும்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்ய, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பைக் கையாண்டுள்ளார். இயக்குனர் ராஜீவ் மேனன், நடிகை தன்யா ஹோப், ராஜீவ் பிள்ளை, பிக்பாஸ் மாயா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம் சூப்பர் ஹியூமன் படம் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா என்று பார்க்கலாம்.

வெப்பன் திரைப்படத்தின் மையக்கருத்து :

சாதாரண மனிதனுக்கு உள்ள சக்திகளை தாண்டி, சூப்பர் ஹியூமன்கள் எனப்படும் மனிதர்கள் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்று உறுதியாக நம்பும் வசந்த் ரவி, தமிழ்நாட்டின் பிரபலமான யூடியூபராகவும், அதே நேரத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் இருக்கிறார். மறுபுறம், வில்லன் ராஜீவ் மேனன் பிளாக் சொசைட்டி என்ற ரகசிய குழுவை நடத்தி, ஒரு பயோடெக் நிறுவனம் மூலம் பலிகடாவாக்கும் ஆராய்ச்சியை நடத்துகிறார்.

தேனியில் நடந்த ஒரு அதிசய நிகழ்வைத் தொடர்ந்து, வசந்த் ரவி தனது சேனலுக்கான உள்ளடக்கத்தைத் தேடி அங்கு பயணிக்கிறார், மறுபுறம் ராஜீவ் மேனனின் ஆட்கள் தங்கள் தொகுதி சமூக உறுப்பினர்களுக்கு ஒரு மனிதாபிமானமற்ற அச்சுறுத்தல் இருப்பதைக் கண்டுபிடிக்க பயணம் செய்கிறார்கள். இருவரும் ஒரு கட்டத்தில் சந்திக்கிறார்கள், தாங்கள் தேடிய சூப்பர் மனிதரை கண்டுபிடித்துவிட்டார்களா, இந்த குழுவிற்கும் வசந்த் ரவிக்கும் என்ன தொடர்பு, தேனி காட்டில் அமைதியான வாழ்க்கை வாழும் சத்தியராஜ் யார் என்று பதில் சொல்லி சுவாரஸ்யத்தை கூட்ட முயன்றிருக்கிறார்கள். திருப்பங்கள் மற்றும் ஆச்சரியங்கள் கொண்ட இந்த முயற்சி வெற்றி பெற்றதா?

வெப்பன் திரைப்படத்தின் திரைவிமர்சனம் (Weapon Movie Review)

படத்தின் நாயகன் வசந்த் ரவி. சாதாரண யூடியூபராக அறிமுகமாகி, சூழலியல் பற்றி வகுப்பெடுக்கும் நாயகனாக அறிமுகமாகி முதல் பாதி முழுக்க ஒரு துணை கேரக்டர் போல் வலம் வருகிறார். இரண்டாம் பாதியில் வசந்த் ரவி சிறப்பாக ஸ்கோர் செய்துள்ளார். வசந்த் ரவி அந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்ற உடலமைப்புடன் கச்சிதமாகப் பொருந்தினாலும், மிகையாக நடிப்பதைத் தவிர்த்து இருக்கலாம். சூப்பர் ஹியூமன் என விளம்பரப்படுத்தப்பட்டு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தோன்றும் சத்தியராஜ் கதாபாத்திரம், சந்திரமுகி பாம்பு போல் எங்கே எங்கே என தேட வைத்து இடைவேளையின் போது மாஸ் ஆக அறிமுகமாகிறார்.

எதிர்பார்த்ததை விட திரை நேரம் குறைவாக இருந்தாலும், யானையை கட்டிப்பிடித்து விளையாடுவது, வில்லன்களை இரக்கமில்லாமல் அடிப்பது, குடும்பத்தைப் பற்றிய கவலை என கதாபாத்திரத்திற்கு அழுத்தம் சேர்த்திருக்கிறார். நடிகை தன்யா ஹோப் தமிழ் சினிமாவின் வழக்கமான பொம்மை நாயகியாக படத்தில் வந்து செல்கிறார். ஸ்டைலிஷ் ஹை சொசைட்டி வில்லனாக வரும் ராஜீவ் மேனன், தனது உதவியாளர் ராஜீவ் பிள்ளையுடன் இணைந்து கதாபாத்திரத்திற்கு தேவையானதை செய்து செய்கிறார். வெப்பன் திரைப்படத்தை ஒரு முறை திரையரங்குகளில் பார்க்கலாம்.   

Latest Slideshows

Leave a Reply