ஆசிரியர் தகுதி தேர்வு தாள் - II கான கணினி வழித் தேர்வு தேதி அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம் ஆனது  ஆசிரியர் தகுதி தேர்வு தாள் – II ( 2 ) ற்கான கணினி வழித் தேர்வு தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, ஆசிரியர் வாரியம் January மாதம் 31ம் தேதி முதல் February  மாதம் 12ம் தேதி வரை உள்ள தேதிகளில் தாள்-II ற்கு உரிய தேர்வுகள் கணினி வழியில் மட்டுமே நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

தேர்வு கால அட்டவணை ( Examination Schedule ) மற்றும் அனுமதிச்சீட்டு (Admit card) வழங்கும் விவரம் ஜனவரி மூன்றாம் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று ஆசிரியர் வாரியம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் , பயிற்சித் தேர்வு (Practice Test) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்களுக்கு தேர்வுக்கு 5 நாட்களுக்கு முன்பிருந்து  ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்ள  வாய்ப்பு வழங்கும். இதன் மூலம் இந்த கணினி வழித் தேர்விற்காக (Computer Based Examination) பயிற்சித் தேர்வு (Practice Test) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் பயிற்சியினை மேற்கொள்ளலாம்.

முன்னதாக, கடந்த 2022 -ம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்- I,II) அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம்  2022  மார்ச் மாதம் வெளியிட்டது. இதற்கான, விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு முதல் தாளுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 

ஆசிரியர் தகுதி தேர்வு தாள் – II ( 2 ) ற்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், தற்பொழுது ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் – II ( 2 ) ற்கான கணினி வழித் தேர்வு தேதியை அறிவித்துள்ளது.

Leave a Reply

Latest Slideshows