வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் தளபதி விஜயின் "Kutty Story"

தளபதி விஜய் தற்போது நடித்த வரும் “வாரிசு” திரைப்படம் வருகின்ற ஜனவரி-12 ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், சங்கீதா, ஷாம், ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை மிக பிரமாண்டமாக, பிரபல தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு.. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதி இசையமைப்பாளர் தமன் இசைமைத்துள்ளார். இந்த படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்களும் YouTube – ல் பல மில்லியன் பர்வையாளர்களை கடந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து இரன்டு வருடங்களுக்கு பிறகு தற்போது வாரிசு படத்தின் ஆடியோ லாஞ்ச் ( டிசம்பர் 24 ) அன்று நடைபெற்றது. வாரிசு இசை வெளியீட்டு விழாவானது சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் படத்தில் நடித்துள்ள முக்கிய பிரபலங்கள் மற்றும் விஜியின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் – ஷோபாவும் வருகை புரிந்தனர். இதை தொடர்ந்து விஜய் திரைஉலகுக்கு வந்து 30 வருடங்கள் ஆனதை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

Varisu Audio Launch Host - Platformtamil

பிக் பாஸ் ராஜூவும், விஜய் டிவி ரம்யாவும் தொகுத்து வழங்கும் இந்த இசை வெளியீட்டு விழாவில் முதல் பாடலாக “வா தலைவா” பாடலை பாடகர்கள் சங்கர் மகாதேவன், கார்த்திக், டிரம்ஸ் சிவமணி, இசையமைப்பாளர் தமன் ஆகியோர் இணைந்து பாடினர்.

இதனை தொடர்ந்து வாரிசு படத்தின் கதை ஆசிரியர் ஹரி அவர்கள் பேசுகையில் வாரிசு படமானது தமிழ் படம்தான். நான் இதுவரை விஜயை போல் ஒரு எளிமையான நபரை பார்த்தே இல்லை என புகழ்ந்து கூறினார்.

டேன்ஸ் மாஸ்டர் ஷோபி அவர்கள் வாரிசு இடத்தில் “பாப்பா பாப்பா” என்ற பாடலுக்கு நடனம் அமைத்திருக்கிறார். அவர் மாண்புமிகு மாணவன் படத்தில் குரூப் டேன்சராக தொடங்கினர், திருப்பாச்சியில் மாஸ்டர் ஆனார். கடந்த 19 வருடங்களாக விஜய்க்கு நடனம் அமைத்து வருகிறேன். விஜய் சார் எனக்கு எப்பவுமே ஸ்பெஷல் தான் என கூறினார்.

விஜய் ஃபேனாக மாறிய ராஷ்மிகா

Varisu Rashmika - Platformtamil

ராஷ்மிகா அவர்கள் கூறியது… நானும் அப்பாவும் கில்லி படம் பார்ப்பதற்கு போனோம்; அதன் பின்னர் நான் விஜயின் ரசிகை ஆனேன். நான் பொய் சொல்லவில்லை நான் எங்கு சென்றாலும் எனக்கும் புடித்த நடிகர் விஜய் தான் என்று சொல்லுவேன் என ராஷ்மிகா இசை வெளியீட்டு விழாவில் கூறினார்.

மேடையில் கண் கலங்கிய தமன்

இசையமைப்பாளர் தமன் அவர்கள் நான் இசையமைப்பாளர் என்ற பார்வையில் இருந்து சொல்கிறேன், இந்தியாவில் ஆதார் எவ்வளவு முக்கியமோ அதுபோல ஒரு இசைமையபலருக்கு விஜய்க்கு இசை அமைப்பதும் முக்கியம். நான் இன்று சாப்பிடப் போவதில்லை… அவ்வளோ சந்தோசமாக இருக்கிறேன் என பேசிகொண்டே தமன் மேடையில் கண்கலங்கினார்.

விஜயை முத்தமிட்ட சதீஷ்

எனக்காக என்னுடைய குடும்பம், நண்பர்கள் கஷ்டப்பட்டார்கள் என்றால் அது ரத்த பாசம், எந்த வித தொடர்பும் இல்லாமல் ரசிகர்கள் வைக்கும் அன்பும், பாசமும் பெரியது என்று விஜய் சொல்லுவார்; விஜய் மூன்று தலைமுறையை கட்டிப்போட்டு இருக்கிறார். என பேசிய நடிகர் சதீஷ் விஜயை கட்டிப்பிடித்து முத்தமிட்டார்.

விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என நினைவுகூர்ந்த சரத்குமார்

நடிகர் சரத்குமார் பேசியபோது “சூரிய வம்சம்” படத்தின் வெற்றி விழாவில் கருணாநிதி அவர்கள் கலந்து கொண்டார். அப்போது நான் விஜய் தான் அடுத்த “சூப்பர் ஸ்டார்” விஜயதான் என்று சொன்னேன். அது இன்று நிஜமாகி இருக்கிறது. என்று நடிகர் சரத்குமார் அவர்கள் கூறினார்.

நானும் விஜயின் ஃபேனாக மாறிவிட்டேன்- பிரகாஷ் ராஜ்

படத்தின் கிளைமேக்சில் ஒவ்வொரு காட்சியிலும் அவ்வளவு சிறப்பாக நடித்துள்ளார். நான் மனதார சொல்கிறேன் நானும் விஜய் ரசிகனாக மாறிவிட்டேன் என கூறினார். அதுமட்டுமில்லாமல் இன்றிய தலைமுறைக்கு மிகவும் அவசியமானது, இந்த வாழ்க்கைக்கு நேர்மறையான விஷயத்தை பகிர்ந்து கொள்ளும் என பிரகாஷ் ராஜ் கூறினார்.

ஜானி மாஸ்டர்

 ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ஜானி மாஸ்டர், ” நான் நிறைய ஹீரோக்களுடன் பணியாற்றியிருக்கிறேன். என்னை பொறுத்தவரையில் தெலுங்கில் பவன் கல்யாண் என்னுடைய பேவரட் ஆனால் இப்போது விஜய் சார் தான் பேவரட் ஆக மாறியுள்ளார். எல்லா திறமையாளர்களையும் அவர் ஊக்குவிக்கிறார். என்று ஜானி மாஸ்டர் பேசியுள்ளார்.

தயாரிப்பாளர் லலித்

தொடர்ந்து ஏழு ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பாளர் லலித் பேசுகையில், திரையரங்கு திறக்கணும் என் ரசிகர்கள் அனைவரும் தியேட்டர்ல படம் பாக்கனும் னு தளபதி பிடிவாதம் பிடித்ததால் தான் ரிலீஸ் ஆனது மாஸ்டர் படம். ஓடிடியில் மாஸ்டர் படத்திற்கு மிக பெரிய ஆஃப்ர் கிடைத்தது. ஆனால் தியேட்டர்களுக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று விஜய் சொன்னார். விஜயின் சினிமா வாழ்க்கையிலேயே பார்த்திராத அளவிற்கு வாரிசு படம் மிக பெரிய ரிலீசாக இருக்குபோது என்று லலித் கூறியுள்ளார்.

இசை வெளியீட்டு விழாவில் Soul of Varisu பாடல் பாடப்பட்டது. தனது தாய் ஷோபாவுடன் உணர்ச்சி போங்க பாடலை பார்த்து ரசித்தார் விஜய், இது ரசிகர்களை ஈர்த்தது.

தீ தளபதிக்கு பாடலுக்கு மாஸாக என்டரி குடுத்த விஜய்

Varisu Vijay Entry - Platformtamil

 வாரிசு படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் படத்தில் இணைந்துள்ள அனைத்து பிரபலங்களும் பேசிய பிறகு இறுதியாக விஜய் மேடை ஏறி பேசினார். விஜய் அவர்கள் மேடை ஏறி வரும்போது ரசிகர்கள் அனைவரும் பேச வரும்போது ரசிகர்கள் அனைவரும் கதிக்கொண்டு ஆனந்தத்தில் இருந்தனர்.அவர் வந்து ரசிகர்களை பார்த்து ரஞ்சிதமே பாடல் ஸ்டைலில் ஃபிளையிங் கிஸ் கொடுத்தார்.

இறுதியாக தன்னுடைய ரசிகர்களுக்கு முத்தம் கொடுக்க ஒரு ஸ்டைல் கிடைத்துவிட்டது என்று கூறினார். இதையடுத்து பேச தொடங்கிய அவர், விஜய் மக்கள் இயக்கம் ரத்த தானம் வழங்குவது தனக்கு பெருமையாக உள்ளதாக கூறினார். ரத்தத்திற்கு தான் ஜாதி தெரியாது, இந்த நல்ல குணத்தை ரத்தத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். ரசிகர்கள்மீது வைத்திருக்கும் அன்புதான் தனக்கு போதை என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து தன் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து கொண்டார். இந்த வீடியோவானது வைரலாகி வருகிறது.

1990 – ல் எனக்கு போட்டியாக ஒரு நடிகர் வந்தார். போகப்போக அவர் என்னுடைய சீரியஸ் ஆன போட்டியாளராக மாறினார். இதையடுத்து நானும் கஷ்டப்பட்டு ஓடினேன், அந்த நடிக்கரைவிட எப்படியாவது வெற்றியை பெறவேண்டும் என்று கடுமையாக போராடினேன். அப்படி நம்ம எல்லோருக்கும் அப்படிபட்ட போட்டியாளர் இருக்க வேண்டும். அந்த போட்டியாளர் பெயர் ஜோசப் விஜய்… ஆம் அது நான்தான். நீங்கள் உங்களுடன் போட்டி போடுங்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் நம்ம போகின்ற பாதை நிறைவாக இருக்கணும்னா நாம தேர்ந்துடுக்குற பாதை சரியாக இருக்கனும். நமக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நன்றியை கட்டிகொண்டே இருக்க வேண்டும். அன்புதான் உலகத்தையை ஜெய்க்கக்கூடிய ஒரே விஷியமாகும் என்று கூறினார். தேவையான விமர்சனமும், தேவையில்லாத எதிர்ப்பும் தான் நம்மை ஓட வைக்கும். என பேசினார்.

Leave a Reply

Latest Slideshows