1 to 3 Month Pregnancy Diet Chart : கர்ப்பகால பெண்கள் முதல் மூன்று மாதம் சாப்பிட வேண்டிய உணவுகள்

பெண்கள் முழுமை பெறுவது தாய்மையில் தான். தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான கட்டம் என்று சொல்லலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கர்ப்ப காலத்தில், பெண் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகிறாள். இதைத்தான் பேறு காலம், கர்ப்ப காலம், மகப்பேறு காலம், பிரசவ காலம் என பல பெயர்களில் அழைக்கிறோம். அதை கவனமாக நிர்வகிக்கும் பெண்கள் ஆரோக்கியமான குழந்தைகளுடன் தாய்மார்களாய் விளங்குகிறாள். வாழ்க்கையின் மகிழ்ச்சியான இக்கால கட்டங்களை கடக்க விரும்பும் பெண்கள் முதலில் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். ஈருயிர் ஓர் உடலாய் வாழும் பெண்கள் முதலில் உடல் அளவில் வலிமையைக் கொண்டு வர சத்தான உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும்.

கருத்தரித்த நாளிலிருந்து, பெண்கள் பெரும்பாலும் ஒவ்வாமை காரணமாக உணவைத் தவிர்க்கிறார்கள். ஆனால் சத்துக்கள் நிறைந்த உணவுகள் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. குழந்தையின் உறுப்புகள் வளர ஆரம்பிக்கும் இந்த நேரத்தில் சத்தான உணவு குழந்தையின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. கடுமையான வாந்தியை அனுபவிக்கும் பெண்கள் இரத்த சோகை மற்றும் குடல் புண் என்ற ஆரம்ப கட்ட பிரச்சனையைச் சந்திப்பார்கள். எனவே, ஒவ்வாமை, வாந்தி, கடுமையான உடல் சோர்வு போன்றவற்றால் அவதிப்படும் பெண்கள், அந்த உணர்வைக் கட்டுப்படுத்தும் உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் கர்ப்ப காலத்தில் பெண்கள் முதல் மூன்று மாதத்தில் சாப்பிட வேண்டிய உணவுகளை (1 to 3 Month Pregnancy Diet Chart) தற்போது காணலாம்.

1 to 3 Month Pregnancy Diet Chart - கர்ப்பகால பெண்கள் முதல் மூன்று மாதம் சாப்பிடும் உணவுகள் :

1 to 3 Month Pregnancy Diet Chart – கீரைகள் : குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கீரை மிகவும் அவசியமானதாகும். அதிலும் கருவைச் சுமக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிகம் தேவை. கீரையில் வைட்டமின் பி என்னும் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. ஒரு பெண் கருவுற்றதை உறுதி செய்ததும் உணவில் சேர்க்க வேண்டிய முதல் பொருள் கீரையாகதான் இருக்க வேண்டும். கீரையில் இருக்கும் ஃபோலிக் அமிலமானது கருவின் மூளை மற்றும் முதுகெலும்பு தொடர்பான நரம்பு குழாய் தொடர்பான குறைகள் மற்றும் கருவின் பிறப்பு குறைபாடுகளை தடுக்கிறது. தினமும் ஒரு கீரையாக முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி, பாலக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை என வகைவகையாக எடுத்துக்கொள்ளலாம்.

1 to 3 Month Pregnancy Diet Chart – சிட்ரஸ் பழங்கள் : சிட்ரஸ் பழங்களை சொல்லி தான் எடுக்க வேண்டுமென்பதில்லை. ஏனெனில் கர்ப்பிணிப் பெண்கள் குமட்டலைத் தடுக்க சிட்ரஸ் பழங்களை விரும்புகிறார்கள். சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளைக்கு 1 கப் எடுக்க வேண்டும். பழச்சாறுகளில் அதிக கலோரிகள் மற்றும் நார்ச்சத்து குறைவாக இருப்பதால், அதை மிகைப்படுத்தாதீர்கள். எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

1 to 3 Month Pregnancy Diet Chart – தயிர் : கர்ப்பிணிகள் தயிர் மற்றும் மோர் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தயிர் கால்சியத்தின் சிறந்த மூலமாகும். கர்ப்பிணிப் பெண்ணுக்கு கால்சியம் சத்து குறையும்போது, ​​வளரும் கருவுக்கு கால்சியம் தேவைப்படும்போது அது கருவின் எலும்புகளில் இருந்து உறிஞ்சப்படுகிறது. தினமும் ஒரு கப் தயிர் சேர்த்துக் கொண்டால் கருவின் எலும்புகள் வலுவாக இருக்கும். குழந்தை வளரும்போது, ​​குழந்தைக்குத் தேவையான கால்சியம் சத்து குறையாது. குழந்தை வலுவான எலும்புகளுடன் வளர கர்ப்பத்தின் தொடக்கத்தில் ஒரு கப் தயிர் அவசியம் எடுத்துகொள்ளுங்கள்.

1 to 3 Month Pregnancy Diet Chart – பீன்ஸ் வகைகள் : கர்ப்பிணி பெண்கள் முதல் மூன்று மாதங்கள் அதிக மலச்சிக்கலை சந்திக்கிறார்கள். இந்த நேரத்தில் நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதன் மூலம் மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது. நார்ச்சத்து உணவுக்கு பீன்ஸ் சிறந்த தேர்வாகும். இது கர்ப்பிணிப் பெண்களுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து வழங்கி மலச்சிக்கலைத் தடுக்கிறது. பீன்ஸ் சீரான குடல் இயக்கத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும், மலக்குடல் பகுதியில் உள்ள நரம்புகள் வீங்கி, குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கிறது. எனவே உணவில் சில வகை பீன்ஸ் சேர்த்துக் கொள்வது நல்லது.

1 to 3 Month Pregnancy Diet Chart – முட்டை : கருவுற்ற பெண்கள் முட்டை பிரியர்களாக இல்லை என்றாலும், முட்டையை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கர்ப்பிணிப் பெண்களின் புரதத் தேவையை முட்டை பூர்த்தி செய்கிறது. இதில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் உள்ளது. இது குழந்தையின் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவும்.

1 to 3 Month Pregnancy Diet Chart – கொட்டை வகைகள் (பாதாம், பிஸ்தா…) : கர்ப்பம் முழுவதும் நட்ஸ் வகைகள் அவசியம். இதை அளவாக உட்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம். கர்ப்பிணிப் பெண்களுக்கு முதலில் புரதம் அவசியம். கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் கர்ப்பிணிப் பெண்களுக்கு புரதம் அவசியம். ஒவ்வொரு நாளும் 60 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட புரதத்தைப் பெற அறிவுறுத்தப்படுகிறது. அக்ரூட், பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரி போன்ற கொட்டைகளில் ஆரோக்கியமான அளவு நார்ச்சத்து, கொழுப்பு மற்றும் புரதம் உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் இவ்வாறான கொட்டைகளை சாப்பிடுவதன் மூலம் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

1 to 3 Month Pregnancy Diet Chart – மீன்கள் : பொதுவாக, மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்துள்ளதால், கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்லது. ஆனால் அவற்றில், மற்ற மீன்களை விட சால்மன் மீனில் இந்த சத்துக்களில் அதிக அளவில் உள்ளது. எனவே கர்ப்பிணி பெண்கள் சால்மன் மீனை அதிகளவு எடுத்துக்கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் அனைத்து உணவுகளும் சத்தானதாக இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில், சில உணவுகள் மீது கவனம் செலுத்தி அவற்றை அடிக்கடி சேர்ப்பது மேலும் ஆரோக்கியத்தை உண்டாக்கும்.

Latest Slideshows

Leave a Reply