Animal Movie Rashmika First Look: 'அனிமல்' படத்தில் ராஷ்மிகாவின் போஸ்டர் வெளியீடு

Animal Movie Rashmika First Look: நடிகர் ரன்பீர் கபூர் நடித்து வரும் ‘அனிமல்’ படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கேரக்டரின் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பாலிவுட்டின் பிரபல நடிகர் ரன்பீர் கபூர் தற்போது அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் போன்ற படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ‘அனிமல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அனில் கபூர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ரத்தம் வடியும் கையுடன் சுத்தியயைப் பிடித்துக்கொண்டு சிகரெட் புகைக்கும் ரன்பீரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜனவரி மாதம் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியப் படமாக தயாராகி வருகிறது.

இந்த படத்தை டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் சார்பில் பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து தயாரிக்கின்றனர். இந்த நிலையில் படத்தின் டீசர் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 11ம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாக இருந்த நிலையில், தற்போது டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பாடல்கள் அந்தந்த மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படுவதால் தாமதம் ஆவதாக இயக்குனர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது நிறைய நேரம் எடுப்பதால், இந்த தாமதமென தெரிவித்தார். இந்த படத்திற்கு அமித் ராய் ஒளிப்பதிவு பணிகளை செய்கிறார். ஸ்டண்ட் மாஸ்டராக சுப்ரீம் சுந்தர் கலக்கி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Animal Movie Rashmika First Look

Animal Movie Rashmika First Look - Platform Tamil

 ‘அனிமல்’ படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் கேரக்டரின் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் ‘கீதாஞ்சலி’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அனில் கபூரின் கதாபாத்திரத்தின் தோற்றத்தை படக்குழு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply