Border Gavaskar Trophy 2023: அனல் பறக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசஸ் தொடருக்கு பிறகு மிகவும் எதிர்பார்ப்புடன் பார்க்கப்படும் தொடர் என்றால் அது பார்டர் கவாஸ்கர் டிராபி (Border Gavaskar Trophy) ஆகும். இந்த தொடரை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இந்த இரண்டு அணிகளும் மோதும் தொடரை இரு நாட்டை சேரந்த ஜாம்பவான் ஆலன் கவாஸ்கர் மற்றும் சுனில் கவாஸ்கர் இவர்களின் பெயரை வைத்து தொடர் மாற்றப்பட்டது. இந்த தொடரானது 1996 முதல் நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் களத்தில் பலப்பரீட்சை செய்யும் போதெல்லாம் ஆட்டத்தில் அனல் பறக்கும். இந்த இரண்டு அணிகளும் டெஸ்ட் போட்டியில் விளையாடினால் அதுதான் பார்டர் – கவாஸ்கர் போட்டியாகும்.

பார்டர் – கவாஸ்கர் டிராபி 2023 ஆம் ஆண்டிற்கான தொடரானது 4 வெவ்வேறு இடங்களில் தொடர் நடைபெற இருக்கிறது. ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக பார்டர் – கவாஸ்கர் டிராபி 2023 ஆம் ஆண்டிற்கான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்காக இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. 

Border Gavaskar Trophy - Platform Tamil

முதல் டெஸ்ட் போட்டியானது நாக்பூரில் ஜம்தாவில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் வருகின்ற பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை முதல் போட்டியானது நடைபெறும். டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் பிப்ரவரி 17 முதல் 21 வரை இரண்டாவது டெஸ்ட் போட்டியும், மூன்றாவது டெஸ்ட் போட்டியானது இமாச்சலப் பிரதேசம் கிரிக்கெட் சங்க மைதானத்தில் வரும் மார்ச் 1 முதல் 5 தேதி வரை நடைபெற உள்ளது. நான்காவது டெஸ்ட் போட்டியானது மார்ச் 9 முதல் 13 வரை அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

பார்டர் - கவாஸ்கர் போட்டியை பார்க்கும் நரேந்திரமோடி

அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானமானது 2020 பிப்ரவரி 24 ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்த மைதானத்தில் ஒரு ஒருலட்சத்து 32 பேர் வரை அமர்ந்து போட்டியை பார்க்க முடியும். இப்படியொரு மைதானம் அமைக்கப்பட்ட பின்னர் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ஒரு முறை கூட இந்த மைதானத்திற்கு வந்து போட்டியை பார்த்தது இல்லை. தற்போது உலகின் மிகப்பெரிய டெஸ்ட் தொடராக கருதப்படும் இந்தியா – ஆஸ்திரேலியா இந்த இரண்டு அணிகளும் மோத இருக்கும் கடைசி போட்டியை பிரதமர் நரேந்திரமோடி போட்டியை கண்டு ரசிக்க இருக்கிறார் என்ற தெரிய வந்துள்ளது.

Narendra Modi Visits Border Gavaskar Trophy - Platform Tamil

நடக்க போற இந்த போட்டியில் இந்திய அணியானது வெற்றி பெற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோத இருக்கும். இந்த தொடர் இந்திய அணிக்கு முக்கியமான ஒன்றாக இருக்கும். அகமதாபாத்தில் நடக்க இருக்கும் போட்டியை பிரதமர் நரேந்திர மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் இருவரும் இந்த போட்டியை இணைந்து பார்க்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 மாதங்களுக்கு பிறகு இந்திய ஜெர்சியில் ஜடேஜா

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, கடந்த ஆண்டு நடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜடேஜா கடைசியாக விளையாடினார். ரவீந்திர ஜடேஜாவிற்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 போட்டிகளில் கலந்துகொள்ள முடியவில்லை. முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், ஜடேஜா சில மாதங்கள் ஓய்வில் இருந்தார்.

Ravindra Jadeja Joins Indian Team - Platform Tamil

சில மாதங்களுக்குப் பிறகு தற்போது முழுமையாக குணமடைந்துள்ளதாக ஜடேஜா தெரிவித்துள்ளார். அதாவது ஐந்து மாதங்களுக்கு பிறகு தற்போது 9 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடங்க இருக்கும் பார்டர் – கவாஸ்கர் போட்டியில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ரவீந்திர ஜடேஜா இந்திய அணியில் உள்ளதால் இந்திய அணிக்கும் பலமாக மேலும் கூடுதலாக இருக்கும். ஜடேஜா இதுகுறித்து பிசிசிஐ(BCCI) டிவிக்கு அளித்த பேட்டியில் என்னுடைய முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை கட்டாயம் தேவைப்பட்டது. ஆனால் நான் T20 உலக கோப்பைக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம் என்று நினைத்தேன் ஆனால் உலக கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு என்பதால் அதற்க்கு முன்பாவேகவே மருத்துவர்கள் சிகிச்சை செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தினர். ஆகவே சிகிச்சை செய்து கொண்டேன், சிகிச்சைக்கு பிறகு நான் கடினமாக உணர்ந்தேன் என்று ரவீந்திர ஜடேஜா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Latest Slideshows