Chennai Formula Racing Circuit Was Launched : ஆசியாவில் முதல் முறையாக இரவில் ஃபார்முலா ரேஸ்...

Chennai Formula Racing Circuit Was Launched :

விளையாட்டுத் தலைநகரம் :

Chennai Formula Racing Circuit Was Launched : நமது சென்னை நகரமானது எப்போதும் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கக்கூடிய நகரமாகும். கிரிக்கெட்டில் கூட நிறைய ஜாம்பவான்களுக்கு பிடித்த மைதானம் என்றால் அது சென்னை சேப்பாக்கம் மைதானத்தை தான் கூறுவார்கள். அந்த அளவிற்கு சென்னை ரசிகர்கள் விளையாட்டில் உற்சாகத்துடன் செயல்படுவார்கள். இதனால் நம் சென்னை நகரமானது இந்தியாவிலேயே விளையாட்டு தலைநகரமாக மாறி வருகிறது. கிரிக்கெட் மற்றும் கால்பந்து என பல்வேறு விதமான சர்வதேச போட்டிகள் சென்னையில் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த வருடம் கூட சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடந்தது. இதனை அடுத்து திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்ற பின்பு பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாவட்டம் தோறும் கிரிக்கெட் போட்டிகள், கால்பந்து போட்டிகள் என விளையாட்டு துறையை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார். தற்போது கூட ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கிப்போட்டு 16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடைபெற்றது. இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

ஃபார்முலா ரேஸ் கார் பந்தயம் :

Chennai Formula Racing Circuit Was Launched : இந்த நிலையில் தற்போது ஆசியாவில் முதல் முறையாக இரவு நேரங்களில் நடக்கும் ஃபார்முலா ரேஸ் பந்தயம் நடைபெற உள்ளது. இது மாதிரியான போட்டிகள் பெரும்பாலும் ஐரோப்பா நாடுகளில் தான் நடைபெற்று வந்தன. இதற்காக மட்டும் தமிழக அரசு சுமார் 42 கோடி ரூபாய் செலவு செய்ய உள்ளது. இதில் இந்த மைதானத்தை சுற்றி சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு பந்தயம் நடத்தப்பட உள்ளதால் அந்த சுற்றியுள்ள சாலைகளை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஃபார்முலா ரேஸ் கார் பந்தயம் சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த கார் பந்தயம் வரும் டிசம்பர் மாதம் 9 மற்றும் 10ம் தேதி நடக்க உள்ளது என அறிவிக்கப்பட்டிருந்தது. உலகின் அதிகப்படியான ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வரும் போட்டிகளில் கார் பந்தயமும் ஒன்றாகும். இதில் ஃபார்முலா 1 என்பதுதான் உயர்தர விளையாட்டாகும். தற்போது நடத்தப்பட உள்ளது ஃபார்முலா 4 ஆகும்.

இந்த விளையாட்டுப் போட்டிகள் பெரும்பாலும் பகல் நேரங்களில் நடத்தப்படுவது தான் வழக்கம். ஆனால் தற்போது ஆசியாவிலேயே முதல்முறையாக இந்த போட்டியை சென்னையில் விரைவில் நடத்த தமிழக விளையாட்டு துறையினர் ஆர்வமாக உள்ளனர். இதனால் சென்னையின் மீது விளையாட்டு உலகின் கண்கள் திரும்பிப் பார்க்கும் என்பது தான் இதன் முக்கிய நோக்கம். ஏற்கனவே பல்வேறு விதமான போட்டிகள் சென்னையில் நடத்தப்படுவதன் மூலம் சென்னையில் நிறுத்தப்பட்டிருந்த ஓபன் டென்னிஸ் போட்டி மட்டும் மீண்டும் தொடங்கினால் அனைத்து விதமான போட்டிகளும் நடத்தப்பட்டுவிடும். இதனால் சென்னை அணி விரைவில் விளையாட்டு தலைநகரமாக மாறிவிடும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

உதயநிதி ஸ்டாலின் :

வருகின்ற டிசம்பர் மாதம் பார்முலா ரேஸ் பந்தயம் நமது சென்னையில் நடைபெற இருக்கின்றது. இந்தியாவில் முதல் முறையாக இது போன்ற கார் பந்தயங்கள் சாலை வழியாக நடத்தப்பட உள்ளன. இந்த சிறப்புமிக்க சாம்பியன்ஷிப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளதால் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள வீரர்கள் இங்கு வந்து பங்கேற்க உள்ளனர். இந்த போட்டியை மிகவும் சிறப்பாக நடத்தப்பட வேண்டி ரூபாய் 42 கோடி ஒதுக்கீடு. பொதுப் போக்குவரத்து சாலைகளில் இது போன்ற கால்பந்து கார் பந்தயம் நடைபெறுவது இதே முதல் முறையாகும். இவ்வாறு இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டி குறித்து நம் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசினார்.

Latest Slideshows

Leave a Reply