சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள், 94 கடன் செயலிகளுக்கு தடை | Chinese Apps Banned In India

உள்துறை அமைச்சகத்தின் தகவலின் படி, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 லோன் கடன் வழங்கும் செயலிகளுக்கு மத்திய அரசு தடை செய்யும் பணியை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த சூதாட்ட செயலியால் இளைனர்கள் தங்களது பணத்தை பறிகொடுத்து இதனால் தற்கொலைக்கு தூண்டப்படும் நிலை ஏற்பட உள்ளது. இதனால் ஆன்லைன் குத்தாட்டங்களை தடை செய்ய வேண்டும் என பல கட்சி தலைவர்களும் இது தொடர்பாக வலியுறுத்தி வருகின்றனர். மேலும் கடன் வழங்கும் செயலிகளையும் தடை செய்ய வேண்டும் எனவும் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

இந்த கடன் வழங்கும் செயலி மூலம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஒரு குறிப்பிட்ட தொகையை கடனாக வழங்கி பின்னர் அதற்கு வட்டி என்ற பெயரில் பல்வேறு விதிமுறைகளை திணித்து பெரிய தொகையை காட்டுமாறு வலியுறுத்துகின்றனர். தவணையை கட்ட முடியாத வாடிக்கையாளர்களை மிரட்டி பணத்தை வசூலித்து வருகின்றனர். இந்த நிலையில் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும் என பலரும் தெரிவித்தனர். இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து விதமான சூதாட்ட செயலிகளையும் தடை செய்யவும், முடுக்கவும் மற்றும் உடனடியாக தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு 288 சீன செயலிகளை இந்திய அரசு பகுப்பாய்வு செய்ய தொடங்கியது. இந்திய குடிமக்களின் தனிப்பட்ட தரவுகளை அணுகியிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இதனால் சூதாட்ட செயலிகளை தடை செய்ய மத்திய அரசு நடவெடிக்கை எடுத்துள்ளது.

Leave a Reply

Latest Slideshows