Disadvantages Of Drinking Ice Water: நிறைய ஐஸ் வாட்டர் குடிக்கிறீர்களா அப்போ இத தெரிஞ்சுக்கோங்க

கோடை காலம் வந்தாலே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். வெயிலில் வெளியே சென்று வீட்டிற்கு வந்தாலே தாகத்தால் நா வறட்சி அதிகம் ஏற்படும். அப்போது பெரும்பான்மையானவர்கலின் முதன்மை தேர்வாக இருப்பது தண்ணீர். அதுவும், பிரிட்ஜில் இருக்கும் ஐஸ் வாட்டர் குளிர்ந்த நீரை குடிப்பார்கள் அவ்வாறு குளிர் நிறைந்த தண்ணீரை குடிப்பது சரியா? அப்படி குடித்தால் என்னென்ன நன்மைகள் மற்றும் தீமைகள் ஏற்படும். என்பதை பற்றின சிந்தனைகள் எதுவும் இல்லாமல் நிறைய மக்கள் வெயில் காலத்தில் குளிர்ந்த நீரை (Ice Water) குடிக்கின்றனர். ஐஸ் வாட்டரை அடிக்கடி அதிகம் குடித்தால் ஏற்படும் பாதிப்புகளை இந்த பதிவில் காண்போம்.

Disadvantages Of Drinking Ice Water:

உடல் எடை அதிகரிக்கும்:

குளிர்ந்த நீரை குடிக்கும்போது உடலின் எடை அதிகரிக்கும் ஏனென்றால் குளிர்ந்த நீர் உடலில் இருக்கும் கொழுப்புகளில் கலைப்பு (Dissolution) விளைவை ஏற்படுத்துகிறது. இதனால் கொழுப்புகள் உடலிலேயே தங்கி விடுகிறது. எனவே உடல் எடையை பராமரிப்பவர்கள் குளிர்ந்த நீரை தவிர்ப்பது நல்லது.

பற்களின் பாதிப்பு:

மிகவும் குளிர்ந்த நீரை குடிக்கும்போது பற்களின் உணர்திறன். ஏதாவது உணவு உண்ணும் போது அதில் பிரச்சனைகளை ஏற்படுத்தும், வேறுபானத்தை குடிக்கும்போதும் பல்கூச்சம் ஏற்படும். பற்களின் ஈறுகளில் உள்ள நரம்புகளை பலவீனப் படுத்தும் இது போன்ற பிரட்சனைகள் ஏற்படாமல் இருக்க கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீரை குடிக்கலாம். 

இதய துடிப்பு பிரட்சனை:

அதிகமாக குளிர்ந்த நீரை குடிக்கும்போது இதய துடிப்பு மெதுவாகிறது. ஏனென்றால், குர்ந்த தண்ணீர் நம்முடைய உடம்பில் இருக்கும். கழுத்து வழியாக செல்லும் இதயம், நுரையீரல் செரிமான பகுதியை கட்டுப்படுத்தும் நரம்புகளை குளிர்ச்சியாக்குவதால் இதய துடிப்பும், நாடிதுடிப்பையும் குறைகிறது. இதனால் அபாயகரமான சூழ்நிலைகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு என சொல்லப்படுகிறது.  

செரிமான பிரச்சனைகள்:

அடிக்கடி குளிர்ந்த நீரை பருகும்போது அது வயிற்றை கட்டுப்படுத்துகிறது இதனால், உணவு சாப்பிட்ட பிறகு செரிமானத்தை கடினமாக்குகிறது. மேலும் இரத்தநாளங்களில் சுருக்கத்தை ஏற்படுத்தி செரிமான பிரட்சனையையும் தோற்றுவிக்கிறது. நாம் அதிகமாக குளிர்ந்த நீரை குடிப்பதால் அது நம் உடலின் வெப்ப நிலையோடு ஒத்துப்போகாமல் சாப்பிடும் உணவின் ஜீரணப் பகுதியை பாதிக்கிறது. இதனால் நம் உடலுக்கு கிடைக்கக்கூடிய சத்துக்கள் கிடைக்காமல் போகிறது.  எனவே சாப்பிடும்போது குளிர்ந்த நீரை பயன்படுத்தாமல் வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்துவது சிறந்தது.

சைனஸ் பாதிப்பு:

நாம் தொடர்ந்து குளிர்ந்த நீரை குடிப்பதால் அது நம்முடைய மூளையை உறைய வைக்கிறது. அதிகமாக குளிர்ச்சியான தண்ணீரை குடிக்கும்போது அது நம்முடைய முதுகில் இருக்கக்கூடிய உணர்திறனான நரம்புகளை குளிர்ச்சியாக்குவதால் மூளை பாதித்து தலை வலி, சைனஸ், மூக்கடைப்பு, ஜலதோஷம் போன்ற பிரட்சனைகளை ஏற்படுத்துகிறது. 

தொண்டை வலி:

குளிர்ந்த நீரை அதிகம் குடிக்கும்போது அது சுவாச பாதையில் இருக்கும் ஜவ்வின் வலிமையை குறைத்துவிடும். அதனால், தொற்று கிருமிகள் நிறைய தொண்டை பிரட்சனைகளை ஏற்படுத்தும். டான்சிலைஸ் டிஸிஸ் என்று சொல்லக்கூடிய பிரச்சனைகள், தொண்டைப்புண் போன்றவைகளை இந்த குளிர்ந்த நீர் ஏற்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி:

இயல்பாகவே பிரிஜில் இருக்கும் குளிர்ந்த நீரை தவிர்த்து சாதாரண நீரை குடிப்பது நல்லது. குளிர்ந்த நீரை குடிக்கும்போது அது நோய்யெதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. ஏனெனில் குளிர்ந்த நீரால் அஜீரண பிரட்சனைகள் ஏற்படுகிறது. இதனால் உண்ணும் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துகள் முழுமையாக உடலில் சேருவதில்லை இந்த காரணத்தினால் உடலில் நோய்யெதிர்ப்பு சக்தி குறைகிறது.

உடற்பயிற்சியின்போது குளிர்ந்த நீரை குடிக்கக் கூடாது:

உடற்பயிற்சி செய்யும்போது சிலர் குளிர்ந்த நீர் குடிப்பதையே ஒரு பழக்கமாக வைத்திருப்பார்கள்  அவ்வாறு குடிக்க கூடாது.அவ்வாறு குடிப்பதை தவிர்க்க வேண்டும். குளிர்ந்த நீரை குடித்தால் அது நம் உடலை அதிர்ச்சிக்குள்ளாக்கும். நாம் வேலை செய்யும்போதும் அதிகமாக ஒர்க் அவுட் செய்யும்போதும் நம்முடைய உடல் அதிக வெப்பத்தை உருவாக்கும் அந்த சமயத்தில் நாம் குளிர்ந்த நீரை குடிக்கும் போது அது ஆயுட்கால வயிற்று வலியை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply