அஸ்வத் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் "Dragon"

‘ஓ மை கடவுளே’ படத்தின் இயக்குனர் அஸ்வத் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்திற்கு ‘Dragon’ என்று தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோமாலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். முதல் படத்தின் மூலம் பரபரப்பான இயக்குனராக பெயர் எடுத்த பிரதீப் ரங்கநாதன், அடுத்து லவ் டுடே படத்தின் மூலம் பெரிய பட்ஜெட் நட்சத்திரங்களின் படங்களுக்கு சவால் விட்டார். இப்படத்தின் மூலம் இயக்குனராக மட்டுமின்றி சிறந்த நடிகராகவும் தன்னை நிரூபித்தார். இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த பிரதீப் ரங்கநாதன், இயக்கத்தில் இருந்து சிறிது காலம் கூலாக ஓய்வு எடுத்து முழுநேர நடிகராக மாற முடிவு செய்துள்ளார். இவர் கடந்த ஒரு வருடமாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாகவும், எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்திலும் நடித்து வருகின்றனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

Dragon : அஸ்வத் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணி

பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக ‘ஓ மை கடவுளே’ படத்தின் இயக்குனர் அஸ்வத் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அஸ்வத், பிரதீப் இருவரும் ஒரே கனவோடு கல்லூரியில் ஒன்றாகப் விஸ்காம் சேர்ந்து படித்தவர்கள். கல்லூரியில் அஸ்வத்தின் ஜூனியர் பிரதீப் ரங்கநாதனிடம், ஒரு நாள் நீ நடித்து நான் படம் எடுக்க வேண்டும் என்று அஸ்வத் கூறினார். சரியாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அஸ்வத் இயக்கும் படத்தில் பிரதீப் கதாநாயகனாக நடிக்கும் கனவு நிஜமாகிறது. இந்த இரு கல்லூரி நண்பர்கள் கூட்டணியில் உருவாகும் இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு “Dragon” என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஓ மை கடவுளே படத்தில் கற்பனை கலந்த காதல் கதையை கூறிய அஷ்வத், இந்த படத்தின் மூலம் என்ன மாதிரியான கதை சொல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. Dragon படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் இயக்குனர் மிஸ்கின் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நடிகர்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இரண்டு இளம் இயக்குனர்கள் இணையும் இந்தப் படம் நிச்சயம் இளைஞர்களை கவரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Latest Slideshows

Leave a Reply