Raayan Update : ஜூன் மாதத்தில் வெளியாகும் தனுஷின் ராயன்

நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்றும், இன்னும் மூன்று தினத்தில் முதல் பாடல் வெளியாகும் (Raayan Update) என்று படக்குழு தற்போது அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தனது 50வது படத்தை இயக்கி நடித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி தனுஷ் ஏற்கனவே பவர் பாண்டி படத்தை இயக்கியிருப்பதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரொடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Raayan Update - ஜூன் மாதம் வெளியாகும் ராயன் :

இந்நிலையில், படம் குறித்த அப்டேட்டை மே 6ஆம் தேதி மாலை 6 மணிக்கு அறிவிப்பதாக (Raayan Update) படத்தின் இயக்குநர் தனுஷ் மற்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்தது. இது ராயன் படத்தை பெரிதும் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் படக்குழு அளித்துள்ள அப்டேட்டில், படம் ஜூன் மாதம் வெளியாகும் என்றும், மே 9 ஆம் தேதி முதல் பாடல் வெளியாகும் என்றும், அதாவது இன்னும் 2 நாட்களில் முதல் பாடல் வெளியாகும் என்றும் படக்குழு (Raayan Update) தெரிவித்துள்ளது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வடசென்னையைச் சேர்ந்த மூன்று சகோதரர்களின் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது என்று முன்பு செய்திகள் வந்தன. கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்த சந்தீப் கிஷன் மற்றும் நடிகர் காளிதாஸ் ஆகியோர் இப்படத்தில் தனுஷின் சகோதரர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Latest Slideshows

Leave a Reply