Bhagat Fazil Open Talk About Pushpa Movie : புஷ்பா படம் குறித்து பகத் ஃபாசில் ஓபன் டாக்

புஷ்பா படம் தனக்கு பெரிய அளவில் பெயர் பெற்றுத் தரவில்லை என்று நடிகர் பகத் ஃபாசில் வெளிப்படையாகப் (Bhagat Fazil Open Talk About Pushpa Movie) பேசியுள்ளார். பகத் ஃபாசில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார். மலையாளம் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், தமிழ் என பல மொழிகளிலும் பெரும் ரசிகர்களை கொண்டுள்ளார். சமீபத்தில் வெளியான ஆவேசம் படத்தின் மூலம் பகத் ஃபாசில் மிகப்பெரிய பான் இந்திய ஸ்டாராக மாறி வருவதைக் காணலாம்.

பகத் ஃபாசிலுக்கு வட மாநிலங்களில் பெரிய அளவில் ரசிகர்கள் இல்லை என்றாலும், அவரது டப்பிங் படங்களில் அவரது முகம் அடையாளம் காணும் அளவிற்கு அங்கீகாரம் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தில் அவர் வில்லனாக நடித்தது தான் என விமர்சகர்கள் கூறி வருகின்றனர். பகத் ஃபாசிலுக்கு புஷ்பா படத்தில் குறைவான காட்சிகளே இருக்கும். தற்போது வெளியாக இருக்கும் இரண்டாம் பாகத்தில் அவருக்கு பிரமாண்டமான காட்சிகளை எதிர்பார்க்கலாம். ஆனால் புஷ்பா உண்மையில் தனக்கு ஒரு இந்திய நடிகருக்கான அங்கீகாரத்தை கொடுத்ததா? என்ற கேள்விக்கு பகத் ஃபாசில் தற்போது (Bhagat Fazil Open Talk About Pushpa Movie) வெளிப்படையாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

Bhagat Fazil Open Talk About Pushpa Movie :

பிரபல யூடியூப் சேனல் ஃபிலிம் கம்பானியன் அவேஷம் படத்தில் நடித்ததற்காக பகத் ஃபாசிலுக்கு FCGOLD விருதை வழங்கியது. விழாவில் பகத் ஃபாசில் பேசுகையில், “புஷ்பா படம் எனக்கு எந்த அடையாளத்தையும் (Bhagat Fazil Open Talk About Pushpa Movie) கொடுக்கவில்லை. இதை படத்தின் இயக்குனர் சுகுமாரிடமே சொல்லுவேன். நான் எதையும் மறைக்காமல் நேர்மையாக இருக்க விரும்புகிறேன். மலையாள சினிமாவில் எனது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். நான் யாரையும் அவமதிக்கும் நோக்கத்தில் இதை சொல்லவில்லை ஆனால், புஷ்பாவுக்குப் பிறகு மக்கள் என்னிடம் மேஜிக்கை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நான் அந்த படத்தில் நடித்தது சுகுமார் சார் மீதான அன்பிற்காகவும் தொழில் நிமித்தமாகவும் தான். என்னுடைய சினிமா என்பது இங்கு மலையாளத்தில் இருக்கிறது. என்னுடைய களம் மலையாள சினிமா தான் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்” என்று பகத் ஃபாசில் கூறினார். தமிழை பொறுத்தவரை பகத் ஃபாசில் தற்போது ரஜினியின் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இதன் பிறகு பகத் ஃபாசில், வடிவேலுவுடன் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கவுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply