Bison Started With Poojai : பூஜையுடன் தொடங்கிய துருவ் விக்ரமின் பைசன்

  • நடிகர் துருவ் நடிப்பில் உருவாக இருக்கும் படம் காளமாடன் ஆகும். இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லையில் 60 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளதாக படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் தகவல் தெரிவித்துள்ளார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கவிருப்பதாகவும் கூறினார்.

  • இந்தப் படம் கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்றும், வாழ்க்கை வரலாறு அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார். முன்னதாக இந்த படத்திற்காக கபடி பயிற்சியில் ஈடுபட்டிருந்த துருவ் விக்ரம் இந்த படத்தில் கபடி வீரராக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கபடி விளையாட்டை மையமாக வைத்து முந்தைய படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற சூழலில் பைசன் காளமாடன் வெற்றிப் படங்களின் பட்டியலில் சேரும் என்று எதிர்பார்க்கலாம்.

பைசன் காளமாடன் :

  • பைசன் காளமாடன் படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன் ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம்பெருமாள் மற்றும் அருவி மதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் மாமன்னன் படத்தை இயக்கியிருந்தார் மாரி செல்வராஜ். இப்படத்தைத் தொடர்ந்து வாழை படத்தை இயக்கிய அவர், தற்போது துருவ் விக்ரமுடன் அவர் இணைந்துள்ள அடுத்த படத்தின் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். படத்திற்கு பைசன் காளமாடன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

  • கபடியை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது உண்மைதான் என மாரி செல்வராஜ் தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஆனால் இப்படம் பயோ பிக் இல்லை என்றும் கற்பனை கதை என்றும் அவர் மேலும் தெளிவுபடுத்தினார். இந்த படத்தின் முதல் ஷெட்யூல் திருநெல்வேலியில் தொடர்ந்து 60 நாட்கள் நடைபெற உள்ளது. அடுத்த கட்ட அட்டவணை சென்னையில் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இப்படத்திற்காக மாரி செல்வராஜ் முதல் முறையாக ஒளிப்பதிவாளர் எஷில் அரசுடன் இணைந்துள்ளார். மேலும் இந்த படத்தின் மூலம் மாரி செல்வராஜ் கூட்டணியில் எடிட்டர் சக்தி குமாரும் இணைந்துள்ளார்.

Bison Started With Poojai :

  • இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் (Bison Started With Poojai) தொடங்கியுள்ளது. இதன் படப்பிடிப்பை நடிகர் விக்ரம் தொடங்கி வைத்தார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply