Fish Egg Benefits: மீன் முட்டைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!

அசைவ பிரியர்களின் விருப்பமான உணவுப் பொருள்களில் முக்கியமானது மீன். இந்த மீன்கள் சுவையானது மட்டுமின்றி, நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. மீன்களின் முட்டைகளை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

எப்படி மீன்கள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதோ மீன்களை போலவே மீன் முட்டைகளும் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடியது என்பது தெரியுமா? மீன்களின் முட்டைகளையும் சாப்பிடலாம். அப்படி சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

மீன் முட்டை பயன்கள் (Fish Egg Benefits)

கண் பார்வை திறன் மேம்படும்

Fish Egg Benefits: DHA மற்றும் EPA போன்றவை குழந்தைகளின் பார்வை வளர்ச்சிக்கும், கண்களின் செயல்பாட்டிற்கும் மிகவும் இன்றியமையாத சத்தாகும். இந்த சத்துக்கள் மீன்கள் மற்றும் அதன் முட்டைகளில் அதிகம் உள்ளன. ஒருவருடைய உடலில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மிகவும் குறைவாக இருந்தால் அவர்கள் கண்களில் பலவிதமான பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதனால் தான் மீன்கள் மற்றும் அதன் முட்டைகளை சாப்பிடுவது கண்களுக்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இதயத்திற்கு மிகவும் நல்லது

Fish Egg Benefits: மீன் முட்டைகளில் அதிகம் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது. நம் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்தால் இதய ஆரோக்கியம் மேம்பட்டு இதய நோய்வராமல் தடுக்கிறது. முக்கியமாக இதய நோய் இருப்பவர்கள் மீன் முட்டைகளை அடிக்கடி உட்கொண்டு வந்தால் இதய நோயால் இறக்கும் அபாயம் குறைவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

Fish Egg Benefits: நம் உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருந்தால் தான் அடிக்கடி நோய்வாய்ப்படுவதைத் தடுக்க முடியும். உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை எளிய வழிகளில் அதிகரிக்க விரும்பினால், மீன் முட்டைகளை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடுங்கள். மேலும் மீன் முட்டைகளில் இருக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி நோய்த்தொற்றுக்களின் அபாயத்தைத் தடுக்கிறது.

மூளை ஆரோக்கியம் மேம்படும்

Fish Egg Benefits: மீன் முட்டைகளில் Omega -3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களானது உடலுக்கு முக்கியமான கொழுப்புக்களாகும். இந்த வகை கொழுப்புக்களை நம்முடைய உடலால் உற்பத்தி செய்ய முடியாது. இந்த வகையான கொழுப்புக்கள் மீன்கள் மற்றும் மீன் முட்டைகளில் அதிகமாக காணப்படுகின்றன. இந்த கொழுப்புக்களானது மூளையின் செயல்பாட்டையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன. எனவே மீன் முட்டைகளை உட்கொள்ளும் போது நினைவாற்றல் மேம்படும் மற்றும் மூளை இருமடங்கு சுறுசுறுப்பாகவும் செயல்படும்.

இரத்த உயர் அழுத்தம் கட்டுப்படுகிறது

Fish Egg Benefits: மீன் முட்டைகளில் பொட்டாசியம் மற்றும் Omega -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு உடலில் இரத்தம் உறைவதையும் உடலினுள் உள்ள அழற்சியையும் தடுக்கிறது. ஆய்வுகளில் மீன்கள் மற்றும் மீன் முட்டைகளை மிதமான அளவில் உட்கொண்டு வருவது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது தற்போது தெரிய வந்துள்ளது. எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கொண்டவர்கள் மீன் முட்டைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.

எலும்பு மற்றும் பற்கள்களுக்கு நல்லது

Fish Egg Benefits: எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் D ,கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், போன்ற சத்துக்கள் மிகவும் இன்றியமையாதவை. இவை அனைத்துமே மீன் முட்டைகளில் காணப்படுகின்றன. ஆகவே எதிர்காலத்தில் எலும்பு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கக்கூடாது என்று விரும்பினால் மீன் முட்டைகளை சாப்பிடுங்கள். அதேப் போல் பற்களிலும் எவ்வித பிரச்சனைகளும் வராமல் பற்கள் வலிமையாக இருக்க வேண்டுமானால் மீன் முட்டைகளை தவறாமல் சாப்பிடுங்கள்.

Latest Slideshows

Leave a Reply