வேலை மாறினால் PF பணம் தானாக மாற்றப்படும் - New EPFO Rule

New Rule From 1st April - ஊழியர் வருங்கால வைப்பு நிதியகம் (EPFO) அறிவிப்பு :

ஒரு ஊழியருக்கு ஓய்வூதியம் என்பது அந்த ஊழியர் EPF கணக்கில் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதத்தை அந்த ஊழியர் பங்களிக்க வேண்டும், அதே பங்களிப்பை அந்த ஊழியரின் முதலாளியும் வழங்க வேண்டும். இந்த முறையில், ஒரு ஊழியருக்கு ஓய்வூதியம் ஆனது அவரது PF கணக்கில் ஒவ்வொரு மாதமும் சேமிக்கப்படும். இதுவரை ஒவ்வொரு முறை வேலை மாறிய போதெல்லாம், UAN இல் புதிய PF கணக்குகள் சேர்க்கப்பட்டன. PF கணக்கை ஒரு நிறுவனத்தில் இருந்து அடுத்த நிறுவனத்திற்கு மாற்றுவது (PF Transfer) என்பது ஒரு சிக்கலான செயல்முறையாக இருந்தது. தற்போது அந்த சிரமங்கள் நீக்கப்பட்டுள்ளன. புதிய விதியின்படி, ஏப்ரல் 1 முதல் ஒரு நபர் தனது வேலையை மாற்றும்போது, அவரது பழைய வருங்கால வைப்பு நிதி (EPF Balance) இருப்பு ஆனது தானாகவே அவரது புதிய நிறுவனத்திற்கு மாற்றப்படும்.

இதனால் PF கணக்கு (EPF Account) வைத்திருப்பவர்கள் ஒரு புதிய நிறுவனத்தில் சேரும்போது முறையாக PF கணக்கு பரிமாற்றங்களைக் கோருவதற்கான தேவை இனிமேல் இருக்காது. EPFO இன் புதிய சீர்திருத்தத்தின் (New EPFO Rule) மூலம், ஊழியர்கள் தாங்கள் சேமித்த நிதியை எளிதாக அணுக முடியும். நல்ல வாய்ப்பை ஊழியர்கள் பெறுகிறார்கள். மேலும், இந்த புதிய New EPFO Rule ஆனது ஊழியர்களின் ஓய்வூதியப் பயணத்தை பாதுகாப்பானதாகவும் மற்றும் நிம்மதியானதாகவும் மாற்றுகின்றது.

PF பணம் தானாக மாற்றப்படும் - மிகப்பெரிய நிவாரணம் (New EPFO Rule) :

இந்தியாவில் புதிய நிதியாண்டில் New EPFO Rule ஏப்ரல் 1 முதல் தொடங்கிவிட்டது. நிதி, சேமிப்பு என பல திட்டங்களில் பல மாற்றங்கள் ஆனது இந்த 2024-25 புதிய நிதியாண்டில் அமலுக்கு வந்துள்ளன. ஏப்ரல் 1 முதல், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO முக்கியமான மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது ஒரு நபர் தனது வேலையை மாற்றும்போது, அவரது பழைய வருங்கால வைப்பு நிதி (EPF Balance) இருப்பு தானாகவே புதிய நிறுவனத்திற்கு மாற்றப்படுகிறது. இதன் மூலம் இபிஎஃப் கணக்கு (EPF Account) வைத்திருப்பவர்கள் ஒரு புதிய நிறுவனத்தில் சேரும்போது கைமுறையாக பிஎஃப் பரிமாற்றங்களைக் கோருவதற்கான தேவை இருக்காது. இது சம்பள வர்க்கத்திற்கு ஒரு பெரிய நிவாரணமாக வந்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply