Steel Cutting Ceremony Of Cadet Training Ship : காட்டுப்பள்ளியில் 3rd Cadet-Training Ship-ன் Steel-Cutting Ceremony

தமிழகத்தின் காட்டுப்பள்ளியில் 3வது கேடட் பயிற்சி கப்பலின் எஃகு வெட்டும் விழா (Steel Cutting Ceremony Of Cadet Training Ship) :

தமிழகத்தின் காட்டுப்பள்ளியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் 3-வது கேடட் பயிற்சி கப்பலின் (யார்டு-18005) எஃகு வெட்டும் விழா 04/05/2024 (Steel Cutting Ceremony Of Cadet Training Ship) நடைபெற்றது. இந்திய கடற்படையின் உள்நாட்டு கப்பல் கட்டும் முயற்சியில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். மேலும் இது இந்திய அரசாங்கத்தின் ‘ஆத்மநிர்பர் பாரத்’ மற்றும் ‘மேக் இன் இந்தியா’ முன்முயற்சியுடன் ஒத்துப்போகிறது. பாதுகாப்பு செயலாளர் கிரிதர் அரமனே இந்த 3-வது கேடட் பயிற்சி கப்பலின் எஃகு வெட்டும் விழாவிற்கு தலைமை தாங்கினார். எல் அண்ட் டி பிரிசிஷன் இன்ஜினியரிங் & சிஸ்டத்தின் செயல் துணைத் தலைவர் திரு.அருண் ராம்சந்தானி முன்னிலையில் இந்த 3-வது கேடட் பயிற்சி கப்பலின் எஃகு வெட்டும் விழா (Steel Cutting Ceremony Of Cadet Training Ship) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் Larson & Toubro (L&T) மூத்த அதிகாரிகள் மற்றும் கடற்படை மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் மற்றும் Larson & Toubro (L&T)-க்கும் இடையே Cadet Training Ship-களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம்

  • இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் மற்றும் Larson & Toubro (L&T)-க்கும் இடையே உள்நாட்டு வடிவமைப்பிற்கான (உள்நாட்டு கப்பல் கட்டும் முயற்சிக்கான) ஒப்பந்தம் மற்றும் மூன்று கேடட்-பயிற்சி கப்பல்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் ஆனது மார்ச் 2023ல் முடிவுக்கு வந்தது. இது மூன்று தேசிய மாணவர் பயிற்சிக் கப்பல்களை உள்நாட்டிலேயே வடிவமைத்து கட்டுவதற்கான ஒரு ஒப்பந்தம் ஆகும். இது ஒரு நீண்டகால ஒருங்கிணைந்த தொலைநோக்குத் திட்டம் ஆகும். இந்த திட்டம் ஆனது இந்திய கடற்படைக்காக மூன்று கேடட் பயிற்சிக் கப்பல்களை இயக்க வகை செய்கிறது.
  • இந்த கேடட்-பயிற்சிக் கப்பல்கள் ஆனது கடலில் பயிற்சி அதிகாரி கேடட்களுக்கு (தேசிய மாணவர் படை பயிற்சி அலுவலர்களுக்கு) அவர்களின் அடிப்படைப் பயிற்சிக்குப் பயன்படுத்தப்படும். அதன் பின்னர் கடலில் பயன்படுத்தப்படும். இந்த கப்பல்கள் மூலம் பயிற்சி வசதியை நட்பு நாடுகளைச் சேர்ந்த கேடட்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டும் என்று அதிகாரிகள் அறிக்கையில் கூறியுள்ளனர்.
  • இந்திய கடற்படையின் உயர் அதிகாரிகள், “இது இந்திய கடற்படையின் உள்நாட்டு கப்பல் கட்டும் முயற்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்றும் இது இந்திய அரசின் ‘ஆத்மநிர்பர் பாரத்’ மற்றும் ‘மேக் இன் இந்தியா’ முன்முயற்சியுடன் ஒத்துப்போகிறது” என்று அறிக்கையில் கூறியுள்ளனர். இந்திய கடற்படைக்கு இந்த கப்பல்கள் ஆனது செப்டம்பர் 2026 முதல் வழங்கப்பட வாய்ப்புள்ளது.

Latest Slideshows

Leave a Reply