Frozen Ice In Moon ISRO's Finds : நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள்
நிலவின் பள்ளங்களில் பனிக்கட்டி உறைந்திருப்பதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான (இஸ்ரோ) உறுதி (Frozen Ice In Moon ISRO’s Finds) செய்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலத்தை நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சி செய்வதற்காக தயார் செய்தது. இந்த விண்கலம் ஜூலை 14 அன்று விண்ணில் ஏவப்பட்டது. தொடர்ந்து பல்வேறு கட்ட பயணங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 23 அன்று ‘விக்ரம்’ லேண்டர் பாகம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. பின்னர் அதிலிருந்து ரோவர் வாகனமும் நிலவின் தரைப்பகுதிக்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு, லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தபடியும், ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்றும் 14 நாட்கள் ஆய்வு செய்து, பல்வேறு அரிய தகவல்களையும் படங்களையும் திருப்பி அனுப்பியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சந்திரயான் 3 விண்கலம் மூலம் நிலவை ஆய்வு செய்த இஸ்ரோ, அதைத் தொடர்ந்து ஆதித்யா விண்கலம் மூலம் சூரியனை ஆய்வு செய்து வருகிறது. அடுத்ததாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை இஸ்ரோ கடுமையாக செய்து வருகிறது. இதற்கான பணிகள் ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிரதமர் மோடி சமீபத்தில் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி வீரர்களை அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில் நிலவில் உள்ள பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் உறைந்து இருப்பதை (Frozen Ice In Moon ISRO’s Finds) இஸ்ரோ கண்டறிந்துள்ளது.
Frozen Ice In Moon ISRO's Finds - நிலவின் துருவப் பகுதிகளில் பனிக்கட்டிகள் :
இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பு நிலவரப்படி, ஐஐடி கான்பூர், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் மற்றும் ஐஐடி (ஐஎஸ்எம்) தன்பாத் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இஸ்ரோவின் விண்வெளி பயன்பாட்டு மையத்துடன் இணைந்து இது தொடர்பாக ஆய்வு நடத்தி வந்தனர். இதில் நிலவின் துருவப் பகுதிகளில் பனிக்கட்டிகள் உறைந்து கிடப்பதை ஆய்வாளர்கள் உறுதி (Frozen Ice In Moon ISRO’s Finds) செய்துள்ளனர். நிலவின் முதல் இரண்டு மீட்டர்களில் உள்ள பனிக்கட்டியின் அளவு இரு துருவங்களின் மேற்பரப்பில் இருப்பதை விட 5 முதல் 8 மடங்கு பெரியதாகும். நிலவில் துளைகளை துளைத்து அவற்றின் மாதிரிகளை பகுப்பாய்வு செய்ய வேண்டும். இது எதிர்கால நிலவு பயணங்களுக்கு உதவியாக இருக்கும். மேலும், வட துருவத்தில் உள்ள நீர் பனியின் அளவு தென் துருவத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இது தொடர்பாக ஆய்வுகள் நடந்து வருகின்றன.
Latest Slideshows
-
IMS India Masters Team Champion : இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி வெற்றி
-
India 3rd Largest Economy By 2028 : இந்தியா உலகின் 3-வது பொருளாதாரம் கொண்ட நாடாக 2028-ல் மாறும் என மோர்கன் ஸ்டான்லி கணிப்பு
-
Aval Manam Book Review : அவள் மனம் புத்தக விமர்சனம்
-
China Launches Quantum Computer : கூகுள் சூப்பர் கணினியைவிட 10 லட்சம் மடங்கு அதிவேக குவாண்டம் கணினியை சீனா அறிமுகம் செய்துள்ளது
-
Sunita Williams Returns Earth On March 19th : சுனிதா வில்லியம்ஸ் மார்ச் 19-ம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்புகிறார்
-
Interesting Facts About Common Ostrich : நெருப்புக்கோழி பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்
-
CAPF Notification 2025 : மத்திய பாதுகாப்பு படையில் 357 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Good Bad Ugly Story : குட் பேட் அக்லி படத்தின் கதை இதுதானா?
-
எளிமையான மற்றும் பாதுகாப்பான BuzzBGone Mosquito Controller
-
First Hydrogen Train In India : ஹரியானாவின் ஜிந்த் - சோனிபட் வழித்தடத்தில் முதல் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்படவுள்ளது
This Post Has 2 Comments
It’s truly a nice and helpful piece of information. I am glad that you shared this helpful info with us. Please keep us informed like this. Thanks for sharing.
Thanks For Your Valuable Comment