Hike In Building Permit Fees : 1,000 சதுர அடிக்கு மேல் வீடு கட்ட அனுமதி கட்டணம் ஆனது 100% உயர்வு

Hike In Building Permit Fees :

சென்னையில் வீடு கட்ட அனுமதி கட்டணம் ஆனது 1,000 சதுர அடிக்கு மேல்  இருந்தால் 100 சதவீதம் அதிகரிக்கும் (Hike In Building Permit Fees) என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் வணிகம் மற்றும் தொழிற்சாலை கட்டடங்களுக்கும் ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட தொகை ஆனது இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. மேலும் கிணறு, குடிநீர் தொட்டி மற்றும் சுற்றுச்சுவருக்கான கட்டட அனுமதிக்காக கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளது.

பழைய கட்டடங்களை இடிப்பதற்கான அனுமதி கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.  சென்னை மாநகராட்சியின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் அனைத்து கட்டிட அனுமதிக்கான கட்டணங்கள் 100 சதவீதம் வரை (Hike In Building Permit Fees) உயர்த்தப்பட்டுள்ளது. Floor Surface Index (FSI) என்ற தளப்பரப்பு குறியீட்டின் அடிப்படையில் 100 சதுர மீட்டருக்குள் வீடு கட்டினால்,

  • 1 முதல் 40 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.90 கட்டணமும்
  • 41 முதல் 100 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.155 கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஏழை, நடுத்தர மக்களின் நலன் கருதி ஏற்கெனவே வசூலிக்கப்பட்டு வருகின்ற இந்த கட்டணங்கள் ஆனது உயர்த்தப்படவில்லை. ஆனால் அதே நேரம் தளபரப்பு (FSI – Floor Surface Index) குறியீட்டில் 100 சதுர மீட்டருக்கு (1076 அடி) மேல் வீடு, கல்வி நிறுவனங்கள், வணிகம், மற்றும் தொழிற்சாலைகளின் கட்டட பரப்பு இருந்தால் அந்த கட்டடங்களுக்கான அனுமதி கட்டணம் 100 சதவீதம் (Hike In Building Permit Fees) அதிகரிக்கப்படும்.

குடியிருப்பு மற்றும் கல்வி கட்டடங்களை பொருத்தவரை :

  • 1 முதல் 40 சதுரமீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.90 என இருந்த இந்த தொகையானது, தற்போது ரூ.180 என இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது
  • 41-முதல் 100 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.155 என இருந்த இந்த தொகையானது, தற்போது  ரூ.310 என இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
  • 101 முதல் 400 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.410 என இருந்த இந்த தொகையானது, தற்போது ரூ.820 என இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
  • 401 சதுர மீட்டர் மற்றும் அதற்கு மேல் 10 சதுர மீட்டருக்கு 1050 என இருந்த இந்த தொகையானது, தற்போது முறையே ரூ.2,100 என இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

வணிகம் மற்றும் தொழிற்சாலை கட்டடங்களை பொருத்தவரை :

  • 1 முதல் 40 சதுரமீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.210 என உயர்த்தப்பட்டுள்ளது.
  • 41-முதல் 100 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.370 என உயர்த்தப்பட்டுள்ளது.
  • 101 முதல் 400 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.920 என உயர்த்தப்பட்டுள்ளது.
  • 401 சதுர மீட்டர் மற்றும் அதற்கு மேல் 10 சதுர மீட்டருக்கு 2300 என உயர்த்தப்பட்டுள்ளது.

குடிநீர் தொட்டி, கிணறு போன்றவற்றுக்கான கட்டணம் மற்றும் சுற்றுச்சுவருக்கான அனுமதி கட்டணமும் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. பழைய கட்டடங்களை இடிப்பதற்கு அனுமதி கட்டணமும் இதே போல் உயர்த்தப்பட்டுள்ளது. மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்க கட்டடங்களுக்கு ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட தொகை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறையில் உள்ளது.

Latest Slideshows

Leave a Reply