Bond Registration Tokens : தை மாதம் முழுவதும் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும்

Bond Registration Tokens :

சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் (Bond Registration Tokens) தை மாதத்தில் வழங்கப்படும் என பத்திரப்பதிவுத்துறை தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசின் மற்ற துறைகளை போலவே பத்திரப்பதிவு துறையும் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டு உள்ளது. பத்திரப்பதிவுத் துறையில் கடந்த 2022 ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்த 2023 ஆம் ஆண்டு இதுவரை ரூ.8,000/- கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. தமிழக அரசு ஆனது ரூ.25,000/- கோடி வருவாய் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகின்றது. எனவே தமிழக அரசு நிர்ணயித்த வருவாயை பெறவும் மற்றும் பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் இடையூறு இல்லாமல் பணியாற்றவும் வசதியாக, இடைத்தரகர்கள், ஆவண எழுத்தர்கள் யாரும் அலுவலகத்திற்குள் வரக்கூடாது என  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சார்பதிவாளர் அலுவலகத்தில் சுபமுகூர்த்த தினங்களில் கூடுதல் டோக்கன்கள் (Bond Registration Tokens) விநியோகிக்கப்பட்டு வருகின்றன. சாதாரணமாக சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒவ்வொரு நாளும் 100 டோக்கன்கள் விநியோகிக்கப்படும். ஆனால் பத்திரப்பதிவு ஆனது முகூர்த்த நாட்களில் அதிக அளவில் நடக்கும் என்பதால், அந்த நாட்களில் கூடுதலாக டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

பத்திரப்பதிவை சில விடுமுறை நாட்களில் மக்கள் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்ததால் அந்த விடுமுறை நாட்களிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வந்திருக்கின்றன. கடந்த 2023 December மாதம் 14ம் தேதி சுபமுகூர்த்த தினம் வந்த நிலையில், சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டு கூடுதல் டோக்கன்கள் ஆனது விநியோகிக்கப்பட்டது. அதாவது சார்பதிவாளர் அலுவலகத்தில் வழக்கமாக வழங்கப்படும் 100 டோக்கன்களுடன் கூடுதலாக 50 டோக்கன்கள் ஆனது  விநியோகிக்கப்பட்டிருந்தது. அதே போல் எதிர்பார்த்தபடி அதிக அளவு பத்திரப்பதிவும் நடந்து உள்ளது. தற்போது வரும் 15ம் தேதி தை மாதம் ஆனது தொடங்குகிறது.

எனவே, தை மாதத்தில் மக்கள் அதிக அளவில்பத்திரப்பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த தை மாதம் முழுவதும் கூடுதல் டோக்கன்களை (Bond Registration Tokens) விநியோகிக்க தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. இதனை வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் உறுதி செய்திருக்கிறார்கள். இதன் அடிப்படியில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் மற்றும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும். 100க்கு பதிலாக 100 அலுவலகங்களுக்கு 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக நான்கு தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் என தகவல்கள் ஆனது வெளியாகியுள்ளன.

Latest Slideshows

Leave a Reply