IND Vs NZ 3rd T20 : 168 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

IND Vs NZ 3rd T20: இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3 வது T20 தொடரில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்றது .

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக கில் மற்றும் இஷான் கிஷான் களமிறங்கினர். இஷான் கிஷான் 1 ரன் எடுத்து ஆட்டத்தை இழந்தார். இவரை தொடர்ந்து ராகுல் திரிபாதி 44 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். சூரியகுமார் யாதவ் 24 ரன்களில் அவுட் ஆனார். இவர்களை தொடர்ந்து கேப்டன் ஹர்திக் பாண்டியா கில் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்து 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து கில் அவுட்டாகாமல் இருந்து 63 பந்துகளில் 126 ரன்களை எடுத்தார். அதாவது 12 பவுண்டரி மற்றும் 7 சிஸ்சர்களை விளாசினார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு பிறகு 234 ரன்களை குவித்தனர்.

இதைத்தொடர்ந்து நியூசிலாந்து அணியானது 235 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிரங்கிய நியூசிலாந்து அணியானது 12.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 63 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தனர்.இதனால் இந்திய அணி 3 T20 போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்திய அணிக்காக இளம் வீரரான சப்மன் கில் சதம் விளாசி அசத்தினார் இதனால் ஆட்ட நாயகனாக கில் தேர்வு செய்யப்பட்டார்.

Latest Slideshows

Leave a Reply