Kallakurichi Hooch Tragedy - Platform Tamil

Kallakurichi Hooch Tragedy : கள்ளக்குறிச்சி மக்கள் துயரில் பங்கேற்ற விஜய்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உயிரிழந்த நிலையில் (Kallakurichi Hooch Tragedy), நடிகர் விஜய் மக்களை சந்தித்துள்ளார். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, ரசிகர்களை கூட்டி பொதுக்கூட்டம் நடத்தாமல் மிக அமைதியாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். அரசியலுக்கு வந்த நடிகர் விஜய், தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என அவரது கட்சி நிர்வாகிகள் மற்றும் அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அரசியல் கட்சி தொடங்கி சில மாதங்கள் ஆன நிலையிலும், நடிகர் விஜய் எந்த ஒரு பரபரப்பு அறிக்கையையும், செயல்பாடுகளையும் வெளியிடவில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற அரசியல் தலைவர்களுக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, வாழ்த்து அரசியலைத் தவிர வேறு ஏதாவது அரசியல் இருந்தால் அதைச் செய்யுங்கள் என்று பலரும் அவரை விமர்சிக்கத் தொடங்கினர்.

Kallakurichi Hooch Tragedy :

இந்நிலையில், தமிழக மக்களிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை கள்ளச்சாராய மரணங்கள் ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். 75-க்கும் மேற்பட்டோர் விழுப்புரம், புதுச்சேரி மற்றும் சேலம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கள்ளச்சாராய விற்பனைக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசின் அலட்சிய காரணம் - விஜய் :

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழக அரசை குற்றம் சாட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் உள்ளவர்கள் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தது மனவேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். கடந்த ஆண்டு இதே சம்பவத்தால் பல உயிர்கள் பலியாகிய சோகத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இது போன்ற சம்பவம் நடந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

களத்திற்கு வந்த தளபதி :

இந்த விவகாரம் (Kallakurichi Hooch Tragedy) தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த பரபரப்பான சூழலில் தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் நேற்று கள்ளக்குறிச்சி சென்றார். அங்கு மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து எந்த ஒரு அரசியல் நடவடிக்கையிலும் பெரிதாக மௌனம் காத்து வந்த விஜய், அரசியல் கட்சி தொடங்கிய பிறகு முதல் முறையாக மக்களை சந்தித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply