Kurangu Pedal Trailer : குரங்கு பெடல் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ‘குரங்கு பெடல்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு (Kurangu Pedal Trailer) வெளியிட்டுள்ளது. இது 90ஸ் கிட்ஸ்களின் ஒரு ஏக்க அனுபவமாக உள்ளது. இந்த ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். பொங்கல் திருநாளை முன்னிட்டு இவரது நடிப்பில் வெளியான ‘அயலான்’ படம் வெற்றி பெற்று ரூ.90 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதையடுத்து சிவகார்த்திகேயனின் 21வது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ளது. ‘அமரன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார்.
குரங்கு பெடல் :
- இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள ‘குரங்கு பெடல்’ என்ற படம் மே 3 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் கமல்கண்ணன் இயக்குகிறார்.
- படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிறுவனின் தந்தையாக காளி வெங்கட் நடிக்கிறார். யூடியூப் பிரபலங்களாக அறியப்பட்டு வெள்ளித்திரையில் நடித்து வரும் பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் குரங்கு பெடல் படத்தின் ட்ரெய்லரை (Kurangu Pedal Trailer) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Kurangu Pedal Trailer :
- இந்த குரங்கு பெடல் படத்தின் ட்ரெய்லரில், ஒரு சிறுவன் சைக்கிள் ஓட்ட ஆசைப்படுகிறான். அதற்காக அவன் செய்யும் செயல்கள் மற்றும் சவால்களை மையமாக வைத்து கிராம பின்புலத்தில் காட்சிகள் காட்டப்பட்டுள்ளது. ட்ரெய்லரின் டைட்டில் கார்டில் “விளையாட்டு வீட்டிற்கு நல்லது, வாழ்க்கைக்கு நல்லது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது கவனத்தை ஈர்க்கிறது.
Latest Slideshows
-
Google Cloud India : இந்தியா உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்று
-
Thug Life Trailer : கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
-
TN Leads In Higher Education : தமிழ்நாடு உயர்கல்வி சேர்க்கையில் 47% பெற்று முன்னிலை வகிக்கிறது
-
Thuthikkeerai Benefits In Tamil : துத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Jadeja Is Ranked 1152 In The ICC Rankings : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஜடேஜா 458 புள்ளிகளுடன் 1152-வது நாளாக முதலிடம் நீடிப்பு
-
TNGECL Introduced 3 New Internet Services : TNGECL ஒரே நேரத்தில் 3 வகையான இணையதள சேவையை துவக்கி உள்ளது
-
Vasanth & Co Retail Success Story : நடுத்தர வர்க்க கனவுகளை தவணைகளில் நிறைவேற்றிய வசந்த் & கோ-வின் வெற்றி பயணம்
-
Tribute To Soldiers Of India : இளையராஜா X தளத்தில் இந்திய ராணுவ வீரர்களுக்கு பாராட்டு
-
SBI Circle Based Officer Recruitment : எஸ்பிஐ வங்கியில் 50 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
NFBD Champ Awards 4.0 : நம்ம பேமிலி குரூப் நடத்தும் பிரமாண்ட விருது வழங்கும் விழா