Mudakathan Keerai Benefits : முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள்

Mudakathan Keerai Benefits : கடந்த சில ஆண்டுகளாக மூட்டு வலிக்கு உதவும் மூலிகையாக முடக்கத்தான் கீரை பயன்படுத்தப்படுகிறது. முடக்கத்தான் இட்லி, முடக்கத்தான் தோசை, முடக்கத்தான், துவயல், முடக்கத்தான் போண்டா, முடக்கத்தான் பிரியாணி என அவர்களுக்குப் பிடித்தமான முறையில் முடக்கத்தான் கீரை சமைக்கப்படுகிறது. தற்போது முடக்கத்தான் கீரையின் நன்மைகள் பற்றி காணலாம்.

முடக்கத்தான் கீரை இப்போது சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. முடக்கத்தான் காய்கள் பலூன் போன்றது, அதை அழுத்தினால் பட்டாசு வெடிப்பது போல் சத்தம் வருவதால் குழந்தைகள் மத்தியில் இதை பட்டாசுக்காய் என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் பெயருகேற்றப்படி இது முடுக்குகளை வேரறுக்கும் தன்மை இருப்பதால் இது முடக்கத்தான் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. முடக்கத்தான் கீரையில் காலிகோஸின் குவர்செடின், அபிஜெனின், ப்ரோடோகேடிகுயிக் அமிலம் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன.

Mudakathan Keerai Benefits - முடக்கத்தான் கீரையின் நன்மைகள் :

Mudakathan Keerai Benefits - மூட்டுவலி நீங்க :

முடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு மிக சிறந்தவையாக இருக்கிறது. உங்களுக்கு மூட்டுவலி பிரச்சனை இருந்தால், ஆரம்பத்திலிருந்தே முடக்கத்தான் கீரையை எடுத்துக்கொள்வது வலி நிவாரணியாக செயல்படும். வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது முடக்கத்தான் தோசை, முடக்கத்தான் சட்னி, முடக்கத்தான் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும். இலையை ஆமணக்கு எண்ணெயில் வதக்கி வலி இருக்கும் இடத்தில கட்டி வந்தால் மூட்டு வலி, வீக்கம் குறையும்.

Mudakathan Keerai Benefits - சோர்வு நீங்க :

முடக்கத்தான் கீரையை சிறிதளவு எடுத்து நன்றாக கொதிக்க வைத்து கிரீன் டீ போல் செய்து பருகினால், உடல் சோர்வு மறைந்து உடல் புத்துணர்ச்சி கிடைக்கும். முடக்கத்தானில் சிறிதளவு கசப்புத்தன்மை இருக்கும் என்பதால் இனிப்புக்கு தேன் சேர்க்கவும். இது உடல் வலியை குறைக்கும். உடல் சோம்பல் இருக்கும் போது இந்த டீயை குடிக்கலாம்.

Mudakathan Keerai Benefits - இருமல் நீங்க :

முடக்கத்தான் காய்ந்த இலைகளை நறுக்கி வெயிலில் படாமல் காயவைத்து பொடியாக நறுக்கி பதப்படுத்தி வைக்கவும். இருமல் வரும் போது உதிரான சாதத்தில் நல்லெண்ணெய், உப்பு மற்றும் பொடி செய்யப்பட்ட முடக்கத்தானை சேர்த்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு தேனுடன் கலந்து நாக்கில் தடவி விடலாம். பொடி செய்யப்பட்ட முடக்கத்தானை வெதுவெதுப்பான நீரில் குடித்து வந்ததால் இருமல் நீங்கும்.

Mudakathan Keerai Benefits - காயங்களில் வலி குறைய :

உடலில் காயங்கள் ஏற்படும் போது வலி அதிகமாக இருந்தால் நல்லெண்ணெயில் முடக்கத்தான் இலைகளை காய்ச்சி அந்த எண்ணெயை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் வலி குறையும். முடக்கத்தான் சமூலம், வாத நாராயணன் இலை, நொச்சி வேர், பேய்மிரட்டி ஆகிய இலைகளை சேர்த்து காய்ச்சி தயாரிக்கப்படும் எண்ணெயை ‘உடல் பிடிப்புத் தைலமாக’ பயன்படுத்தி வந்தால் வலிகள் மட்டுமின்றி ஏற்படும் வலிகள் மட்டுமின்றி, உடலில் தோன்றும் பிடிப்பும் நீங்கும்.

Mudakathan Keerai Benefits - மூல நோய் நீங்க :

முடக்கத்தான் கீரை இடுப்பு வலி, இடுப்பு வலி, கை மற்றும் கால் வலி போன்றவற்றுக்கு மருந்தாக பயன்படுகிறது. காது வலியை நீக்குகிறது. முடக்கத்தான் கீரையை வதக்கிய சாற்றை இரண்டு அல்லது மூன்று துளிகள் காதில் விடுவதால் காதுவலி, காது குத்து, சீழ்வடிதல் போன்றவை குணமாகும். மூலநோய்க்கும் சிறந்த மருந்தாகும். முடக்கத்தான் கீரையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் மூல நோய் விரைவில் குணமாகும்.

Mudakathan Keerai Benefits - சுக பிரசவத்திற்கு :

சுக பிரசவத்திற்கு உதவுகிறது. முடக்கத்தான் கீரையை அரைத்து பிரசவிக்கும் நிலையில் உள்ள பெண்ணின் அடிவயிற்றில் கட்டுவதினாலும், இலையின் சாற்றை தடவினாலும் சிறிது நேரத்தில் சுகப்பிரசவம் ஏற்படும். குழந்தை பெற்ற பெண்களுக்கு முடக்கத்தான் கீரையை நன்றாக அரைத்து குழந்தை பெற்ற அடிவயிற்றில் பூச கருப்பையில் உள்ள நச்சுகள் வெளியேறும்.

Mudakathan Keerai Benefits - மலச்சிக்கல் & தலைவலி நீங்க :

மலச்சிக்கலை குணப்படுத்தும், முடக்கத்தான் கீரையில் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் உள்ளதால் இதனை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் குணமாகும். சொறி மற்றும் சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கு சிகிச்சையளிக்கிறது. முடுக்கத்தான் இலையில் பற்று வைத்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். ஜலதோஷத்தால் ஏற்படும் தலைவலியைப் போக்கும். இலைகளை நன்றாக இடித்து வெந்நீரில் ஆவி பிடித்தால் தலைவலி குணமாகும்.

Mudakathan Keerai Benefits - வயிறு பிரச்சனைகள் நீங்க :

எண்ணெயில் முடக்கத்தான் கீரை வதக்கி தலையில் தடவினால் பொடுகு தொல்லை நீங்கும். புற்றுநோயை குணப்படுத்துகிறது. உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க முடக்கத்தான் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், புற்றுநோயின் கடுமை தன்மை குறையும். இளமை வாழ்க்கைக்கு வழிவகுக்கும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் பிரீராடிகள் ரடி எனப்படும் செல் அழிவைத் தடுக்க உதவுகின்றன. வயிற்றுப்புண், அல்சர் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. தினமும் சிறிதளவு கீரையை உட்கொண்டு வந்தால் அல்சர் பிரச்சனை விரைவில் குணமாகும்.

Mudakathan Keerai Benefits - வாத நோய் நீங்க :

வாத வலிகளைக் குணப்படுத்துகிறது. இந்த கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட்டால் தலைவலி குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்தக் கீரையைச் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் இதர பருப்பு வகைகளுடன் சேர்த்துச் சாப்பிட்டால் அல்லது கீரையைச் சாறு எடுத்து சூப்பாகச் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முடக்கத்தான் கீரை ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இது பல்வேறு வீட்டு வைத்தியங்களுக்கு மதிப்புமிக்க கூடுதலாகும். சுவையான தோசைகள் முதல் இனிமையான சூப்கள் மற்றும் பயனுள்ள மேற்பூச்சு பயன்பாடுகள் வரை, மூலிகை ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதில் அதன் பன்முகத்தன்மையை நிரூபிக்கிறது. உட்கொண்டாலும் அல்லது வெளிப்புறமாகப் பயன்படுத்தப்பட்டாலும், முடக்கத்தான் கீரை எந்த ஒரு முழுமையான சுகாதார கருவித்தொகுப்பிலும் இருக்க வேண்டிய ஒரு முழுமையான தீர்வாகச் செயல்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply