Pakistan Earthquake 2024 : பாகிஸ்தானில் நிலநடுக்கம் | அச்சத்தில் உறைந்த மக்கள்

பாகிஸ்தானில் நள்ளிரவில் நிலநடுக்கம் (Pakistan Earthquake 2024) ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் வடக்குப் பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நில நடுக்கம் :

உலகம் முழுவதும் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுகிறது. குறிப்பாக கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் நாட்டில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் எதிரொலித்தது. கடந்த ஆண்டு முழுவதும் உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமானதாகும்.

மேலும், 2024 ஆம் ஆண்டு தொடங்கிய முதல் நாளே, மத்திய ஜப்பானில் 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதன் மூலம் 150-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். மேலும் ஜனவரி 23 அன்று, சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் மிகவும் அதி சக்தியாக இருந்ததால் நிலநடுக்கத்தின் அதிர்வானது டெல்லி- என்சிஆர் வரை அதிர்வு உணரப்பட்டது. நேபாளம்-சீனா எல்லையை ஒட்டிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் உள்ள மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

Pakistan Earthquake 2024 :

இந்நிலையில், பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இன்று காலை 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு நில அதிர்வுக்கான தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தகவல் தெரிவித்துள்ளது. நிலநடுக்கமானது நள்ளிரவு 12:57 மணிக்கு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலநடுக்கத்தின் 190 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் (Pakistan Earthquake 2024) ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Latest Slideshows

Leave a Reply