Pavakkai Benefits In Tamil : நோய்களை தள்ளி வையுங்க...

நம் சாப்பாட்டு தட்டில் அரிதாக இடம்பெறும் காய்கறி வகைகளில் ஒன்றுதான் பாகற்காய். இதன் கசப்பு சுவையால் பலரும் இதனை தவிர்த்துவிடுகின்றனர். அதன் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொண்டால் நாம் பாகற்காயை ஒதுக்கி வைக்க மாட்டோம்.

பாகற்காயின் ஆரோக்கிய பலன்கள் :

Pavakkai Benefits In Tamil : பாகற்காயில் அதிகளவு வைட்டமின் C நிறைந்துள்ளது. இது உடலில் நோய் எதிர்பாற்றலை அதிகரிக்கும் மற்றும் நமது உடம்பில் ஏற்படும் காயங்களை ஆற்றும் தன்மை பாகற்காயிக்கு உள்ளது. பாகற்காயில் இருக்கும் வைட்டமின் A மற்றும் பீட்டா கரோட்டின் கண்களுக்கு நன்மை பயக்கும்.

நாம் பாகற்காய் சாப்பிடுவதால் ரத்ததில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும். கசப்பான பாகற்காயில் கேடசின், எபிகேடசின், குளோரோஜெனிக் அமிலம் மற்றும் கேலிக் அமிலம் உள்ளிட்ட பல சக்திவாய்ந்த ‘ஆன்டி ஆக்சிடென்ட்களை’ கொண்டிருக்கிறது, இவை சிலருக்கு ஏற்படும். புற்றுநோய்கள், முதுமை, இதய நோய்கள் மற்றும் நாள்பட்ட நோய்களை முற்றிலும் குணப்படுத்தக் கூடியது. மீண்டும் வராமலும் தடுக்கவும் செய்யும்.

பாகற்காயில் இருக்கும் மெக்னீசியம், பொட்டாசியம், மற்றும் கால்சியம் ஆகியவை ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவைக் குறைத்து உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. பாகற்காயின் உள்ள ‘ஆன்டி மைக்ரோபியல்’ மற்றும் ‘ஆன்டி ஆக்சிடென்ட் பண்பு’, இரத்தம் மற்றும் கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. குறிப்பாக கல்லீரல் நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது. மதுவினால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தையும் இவை குறைப்பதாக ஆய்வுக் கட்டுரைகள் தற்போது வெளியாகியுள்ளன.

Pavakkai Benefits In Tamil - கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது :

Pavakkai Benefits In Tamil : இவைகளை தவிர பொட்டாசியம், வைட்டமின்கள், ஃபோலேட், ஜிங்க், இரும்பு, ஆகியவை பாகற்காயில் நிரப்பியுள்ளன. பாகற்காயை கர்ப்பிணி பெண்கள் உணவில் சேர்த்து உட்கொண்டு வந்தால் கருவில் உள்ள குழந்தையின் நரம்பு வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவுகிறது. எனவே பாகற்காயை பொரியல், மசாலா, தொக்கு என பல வகைகளில் உணவில் சேர்த்து சமையல் செய்து சாப்பிடலாம்.

பாகற்காய் பொரியல் செய்ய தேவையான பொருட்கள் :

  • பாகற்காய் – 250 கிராம்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – சிறிதளவு
  • வெல்லம் – 100 கிராம்
  • உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை :

பாகற்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, நசுக்கிய வெல்லம் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக பிசைந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வெல்லம் சேர்ப்பதால் இனிப்பும், காரமும் சேர்ந்த சுவையில் இருக்கும், குழந்தைகளும் நன்கு சாப்பிடுவர்.

Latest Slideshows

Leave a Reply