Pomegranate Skin Benefits : மாதுளம் பழத்தோலின் மகிமைகள்

மாதுளையின் தோல்களில் சருமம் முதல் கல்லீரல் வரை காத்து பலன் தரும் நல்ல மருத்துவ குணங்கள் (Pomegranate Skin Benefits) உள்ளன.

Pomegranate Skin Benefits :

  • மாதுளம் பழம் போலவே, மாதுளம் பழத்தின் தோல்களும் பயன்கள் (Pomegranate Skin Benefits) தருகின்றன. இந்த மாதுளம் பழ தோல்கள் உடல் சம்பத்தப்பட்ட பல பிரச்சனைக்களுக்கும் தீர்வாகிறது.
  • மாதுளம் பழத்தின் தோல்கள் அதிக ஆக்ஸிஜனேற்றங்களை கொண்டுள்ளது. இந்த மாதுளம் பழத்தின் தோலில் அதிக அளவில்  பாலிஃபினைல் நிறைந்திருக்கிறது.  இது புற்றுநோய் வராமல் தடுக்க பேருதவி புரிகிறது.
  • அதிக அளவு வைட்டமின் C மாதுளம் பழத்தின் தோல்களில் நிரம்பியிருப்பதால், வளர்ச்சி மற்றும் குறைபாடுகளைச் சமாளிக்கும் ஊட்டச்சத்தாக பயன்படுத்தலாம்.
  • தொண்டை புண், இருமல் தொந்தரவு இருப்பவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கிறது. இந்த மாதுளம் பழதூளில் டீ தயாரித்து குடித்தால் உடனடி நிவாரணம் ஆனது கிடைக்கும்.
  • இந்த மாதுளம் பழதூளை வெந்நீரில் கலந்து வெதுவெதுப்பாக குடித்தால் சுவாச கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.
  • இந்த மாதுளம் பழதூளை கஷாயம் போல காய்ச்சி குடித்தால் வயிற்றிலுள்ள கழிவுகள், நச்சுக்கள், புழுக்கள் உட்பட வெளியேறிவிடும். உடலில் இருக்கும் நச்சுக்களை எதிர்த்துப் போராட இந்த மாதுளம் பழத்தூள் உதவுகிறது.
  • இந்த மாதுளம் பழத்தூள் டீயை தொடர்ந்து குடித்து வந்தால், நினைவுத்திறன் ஆனது அதிகரிக்கும்.
  • மாதுளை பொடியில் நிறைந்துள்ள ஆக்சிஜனேற்றிகள் காது கேளாமை பிரச்சனைகளை சரிசெய்யும்.
  • இந்த மாதுளம் பழத்தூள் ஆனது உடல் எடை குறைக்க உதவுகிறது.
  • தினமும் இந்த மாதுளம் பழத்தூள் பயன்படுத்தினால் நல்ல முகப்பொலிவு தருகிறது.
  • இந்த மாதுளம் பழத்தூள் ஆனது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும்.
  • இந்த மாதுளம் பழத்தூள் ஆனது கல்லீரலை சுற்றி படிந்திருக்கும் கொழுப்புகளும் கரைந்துவிடும். இரவு தூங்கப்போகும் முன்பு, தினமும் இந்த மாதுளம் பழத்தூள் டீயை குடித்து வந்தால், கல்லீரல் சிறப்பாக வேலை செய்யும்.
  • இந்த பவுடர் தலைமுடியையும் நன்றாக காக்கும். பொடி செய்த இந்த மாதுளம் பவுடரை, எண்ணெய்யுடன் கலந்து முடியின் வேர்களில் தேய்த்து, 2 மணி நேரம் ஊறிய பிறகு தலைமுடியை கழுவி வந்தால், பொடுகு தொல்லை ஆனது நீங்கிவிடும் மற்றும் முடி உதிர்வதும் நின்றுவிடும்.

மாதுளம்பழ தோல் பொடி :

மாதுளம் பழத்தின் தோல்களை கழுவி சுத்தம் செய்து நன்றாக வெயிலில் காய வைக்க வேண்டும். பிறகு நன்றாக காய்ந்த மாதுளம் பழத்தின் தோல்களை பொடி செய்து, சலித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.

மாதுளம்பழ தோல் சாறு :

காய வைத்த மாதுளை தோல்களை போலவே புதிதாக மாதுளம் பழத்திலிருந்து உரிக்கப்பட்ட தோல்களையும் மருந்தாகப் பயன்படுத்தலாம். உரித்தெடுக்கப்பட்ட மாதுளம் பழ தோல்களை இடித்தால் அதிலிருந்து சாறு வரும். இந்த சாறில் 50 மில்லி குடித்து வந்தால் ரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்புகள் ஆனது கரைந்து விடும் மற்றும் சர்க்கரை அளவும் கட்டுக்குள் வரும். இரவு தூங்கும் முன்பு தினமும் இதை குடித்து வந்தாலே, மறுநாள் காலை நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

மாதுளம் பழ தோல் தரும் சரும பாதுகாப்பு :

மாதுளம் பழத்தின் தோல்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது. கரும்புள்ளி, வெண் புள்ளிகளை சருமத்தில் இருந்து நீக்க உதவுகிறது.

  • மாதுளம் பழ பவுடர் – 1 ஸ்பூன்
  • பழுப்பு சர்க்கரை – 1 ஸ்பூன்
  • தேன் – 1 ஸ்பூன்
  • அவகோடா எண்ணெய் (ஏதாவது நறுமண எண்ணெய்) – 1 ஸ்பூன்

போன்றவற்றை நன்றாக கலந்து கொண்டு முகம், கழுத்து, கைகளில் நன்றாக மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து கழுவி விட வேண்டும். இதனால், சருமம் நல்ல பளபளப்பாகும் மற்றும் நல்ல தோல் பராமரிப்பும் கிடைக்கும். பிக்மண்டேஷன் பிரச்சனை உள்ளவர்கள், இந்த மாதுளை பொடி கொஞ்சம் கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால், நல்ல பலன் (Pomegranate Skin Benefits) ஆனது கிடைக்கும்.

Latest Slideshows

Leave a Reply