தன்னலமற்ற வீரர் என்றால் தோனி தான்.. முன்னாள் வீரர்கள் கருத்து | Selfless Player MS Dhoni

ஐபிஎல் வரலாற்றில் ஒரு தன்னலமற்ற வீரர் என்றால் அது தல தோனி (Selfless Player MS Dhoni) தான் என முன்னாள் நட்சத்திர வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். T20 கிரிக்கெட் போட்டிகளின் திருவிழாவாக பார்க்கப்படும் ஐபிஎல் போட்டிகள் விரைவில் தொடங்க உள்ளன. ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாத இறுதியில் தொடங்க உள்ளன. இந்நிலையில் முன்னணி அணிகள், வீரர்கள் தொடர்பான பேச்சுகளும் அணிகளை குறித்த பேச்சுகள் நகர தொடங்கியுள்ளன.

ஜியோ சினிமா நடத்திய நிகழ்ச்சியில் ஐபிஎல் (IPL) ஜாம்பவானாகக் கருத்தப்பட்டும் கிறிஸ் கெயில் இதில் கலந்துகொண்டார். அவருடன் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, அணில் கும்பளே, பார்திவ் படேல் மற்றும் ஸ்காட் ஸ்டைரீஸ் ஆகியோர் பங்கேற்றனர். இதில் இவர்களிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டன. ராபிட் பயர் எனப்படும் அதிரடி கேள்விகள் கேட்டகப்பட்டன. கேட்டகப்பட்ட கேள்விகளுக்கு ஒரு கேள்விக்கு ஒரே பதிலைக் கூறி இணையத்தில் ட்ரெண்ட் ஆகிவருகின்றனர். அதாவது ஐபிஎல் வரலாற்றிலேயே தன்னலமற்ற வீரர் என்றால் யார்? இந்த கேள்விக்கு அனைத்து வீரர்களும் அது மகேந்திர சிங் தோனி(Mahendra Singh Dhoni) என்று ஓர் மனதாக பதில் அளித்துள்ளனர்.

கேப்டன் என்ற பதிவிக்காக பல வீரர்கள் கனவுக்காக காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் அந்த பதவி எனக்கு வேண்டாம் என்று சொல்லி சிஎஸ்கே(CSK) அணியின் வீரனாக விளையாடியவர் தோனி. என்று தோனியை பாராட்டி கூறியுள்ளனர். 2022 இல் அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி தனது 41 வது வயதில் சிஎஸ்கே அணிக்காக விளையாட வருகிறார். இதுவே அவரின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது

Leave a Reply

Latest Slideshows