துருக்கியில் 06.02.2023 அதிகாலையில் 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் | Turkey earthquake

Turkey earthquake: 06.02.2023 – திங்கட்கிழமை அன்று அதிகாலையில் தென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஆனது கட்டிடங்களை இடித்தது, மக்களை சிக்க வைத்தது, குறைந்தது 59 பேர் இறந்துள்ளனர் மற்றும் சுமார் 200 பேர் காயமடைந்துள்ளனர்.

துருக்கி – சிரியா எல்லையில் Nurdagi அமைந்துள்ளது. சுமார் 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட  இந்த நிலநடுக்கம் காசியான்டெப் மாகாணத்தின் Nurdagi-க்கு கிழக்கே 23 கிலோமீட்டர் தொலைவில் மற்றும் 24.1 கிலோமீட்டர் ஆழத்தில் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) தெரிவித்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் துருக்கியில் சுமார் 7.0 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால்  தற்போது 06.02.2023 திங்கட்கிழமை ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும். உலகில் இந்த அளவு நிலநடுக்கங்கள் மிகவும் அரிதானவை ஆகும்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள வீடியோக்கள்  டஜன் கணக்கான இடிந்து விழுந்த கட்டிடங்களைக் காட்டுகிறது. இந்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் இடிந்து விழுந்தன மற்றும் குடியிருப்பாளர்கள் தெருக்களுக்கு ஓடினார்கள். மக்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது மற்றும் தாக்கத்திற்குத் தயாராக இல்லாதபோது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சக்தி வாய்ந்த சுமார் 7.8 ரிக்டர் அளவிளான நிலநடுக்கங்கள் தெற்கு மற்றும் மத்திய துருக்கியில் ஏற்பட்டுள்ளன. தெற்கு மற்றும் மத்திய துருக்கி பகுதிகளில் பலத்த நில அதிர்வுகள் உணரப்பட்டன.  சிரியா மற்றும் லெபனான் உட்பட பிராந்தியத்தின் பல நாடுகளில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

Turkey earthquake - Platform Tamil

அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) படி, 1939 ஆம் ஆண்டு சுமார் 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட  இதே  அளவிலான நிலநடுக்கம் 30,000 பேரைக் கொன்றது. அதன் பின்னர் தற்போது 06.02.2023 திங்கட்கிழமை ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் ஆனது துருக்கியை தாக்கிய வலிமையான நிலநடுக்கம் ஆகும்.  அதாவது தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்று ஆகும்.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் 11 நிமிடங்களுக்குப் பிறகு, 6.7 ரிக்டர் அளவிலான வலுவான பின்னதிர்வுகள் பிரதான நிலநடுக்கத்தின் மையப்பகுதியில் இருந்து     வடமேற்கில் சுமார் 32 கிலோமீட்டர் தொலைவில் தாக்கியது. பிரதான நிலநடுக்கம் ஏற்பட்ட 19 நிமிடங்களுக்குப் பிறகு 5.6 ரிக்டர் அளவில் மற்றும் ஒரு தீவிரமான நிலநடுக்கம் ஆனது ஏற்பட்டது.

சிரியாவில், அலெப்போ, ஹமா மற்றும் லதாகி  பகுதிகளில் இறப்புகள் பதிவாகியுள்ளன மற்றும் டஜன் கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர்.  துருக்கியின் 10 நகரங்கள் – Kahramanmaraş, Hatay, Gaziantep, Osmaniye, Adıyaman, Malatya, Şanlıurfa, Adana, Diyarbakır, Kilis இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

சிரிய அரசு நடத்தும் செய்தி நிறுவனமான SANA துருக்கியில் குறைந்தது 17 பேர், அண்டை நாடான சிரியாவில் குறைந்தது 42 பேர் இறந்துள்ளனர் மற்றும் சுமார் 200 பேர் காயமடைந்தனர் என்று தெரிவித்துள்ளது. அதிகாலை காசியான்டெப்பைத் தாக்கிய இந்த நிலநடுக்கம் ஆனது 10 கிமீ ஆழத்தில் இருந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. காஜியான்டெப் நகரில் வசிக்கும் பத்திரிகையாளர் எயாட் குர்டி என்பவர் CNN இடம், இந்த 7.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்ட ஒரு நிமிடத்திற்குள் எட்டு மிகவும் வலுவான பின்அதிர்வுகள் ஏற்பட்டதாக கூறினார்.

Leave a Reply

Latest Slideshows