Two Factor Authentication In NPS : NPS-ன் பாதுகாப்பை அதிகரிக்க Two Factor Authentication செய்யும் வசதி தொடங்கியுள்ளது

பாதுகாப்பை அதிகரிக்க Two Factor Authentication In NPS :

  • மக்கள் தங்களது பணிக்கால ஓய்விற்கு பிறகான ஓய்வான வாழ்க்கை காலத்திற்கு பணத்தை சேர்க்க, பல வகையான திட்டங்கள் உள்ளன. அவற்றில் NPS (National Pension System) என்பது இந்திய அரசால் ஆதரிக்கப்படும் மற்றும் மத்திய அரசால் நடத்தப்படும் ஒரு ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும். இது முதலீடு செய்ய உதவும் ஒரு சந்தை இணைக்கப்பட்ட முதலீட்டு கருவியாகும். NPS திட்டத்தின் கீழ் ஓய்வுக்குப் பிந்தைய ஆண்டுகளுக்கான கார்பஸை உருவாக்க மக்களும் மற்றும் அவர்களது முதலாளியும் பங்களிக்கிறார்கள். மக்கள் தங்களது 75 வயது வரை NPSல் முதலீடு செய்யலாம்.
  • தற்போது இந்த NPSல் உள்ள சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை ஆனது 1.36 கோடி ஆக உள்ளது. இந்த NPS ஆனது பங்குகள், பத்திரங்கள் மற்றும் மாற்று நிதிகளில் பணத்தை முதலீடு செய்யும் சந்தை இணைக்கப்பட்ட ஒரு  முதலீட்டு கருவியாகும். NPS Account Holder-களுக்கு சந்தை அடிப்படையில் வருமானம் கிடைக்கின்றது. NPS ஆனது சந்தாதாரர்களுக்கு பிற வசதிகளையும் அளிக்கின்றது.

NPS ஆனது விதிமுறைகளில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது :

PFRDA (பென்சன் நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்) ஆனது NPS சந்தாதாரர்களுக்கு பயனளிக்கும்  வகையில் பிப்ரவரி 1, 2024 முதல் தேசிய பென்சன் திட்டத்தின் விதிமுறைகளில் மிகப்பெரிய மாற்றத்தை (Two Factor Authentication In NPS) கொண்டு வந்துள்ளது. CRA (Central Record Keeping Agency) மூலம் NPS தொடர்பான செயல்பாடுகளை முடிக்க அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் NPS கணக்கின் பாதுகாப்பு தற்போது அதிகரித்துள்ளது மற்றும் NPS கணக்கின் சந்தாதாரர்கள் அதிக பலனடைகிறார்கள். பென்சன் நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA), வெளியிட்டுள்ள புதிய பாதுகாப்பு முறையின் படி தேசிய பென்சன் திட்ட கணக்கில் இருந்து 25 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை இனி எடுக்க முடியாது.

PFRDA ஆனது உறுப்பினர்களின் ஓய்வூதிய கணக்கின் பாதுகாப்பை அதிகரிக்க இரண்டு காரணி அங்கீகாரம் (Two Factor Authentication In NPS) செய்யும் வசதி தொடங்கியுள்ளது. இந்த மாற்றத்தின் காரணமாக, இனி CRA (Central Record Keeping Agency) அமைப்பில் உறுப்பினர்கள் லாக் இன் செய்ய, அவர்களுக்கு Two Factor Authentication தேவைப்படும் மற்றும் இது இல்லாமல் கணக்கில் லாக் இன் செய்ய முடியாது. இந்த அணுகுமுறை ஆனது CRA அமைப்புக்கான அங்கீகரிக்கப்படாத அணுகலின் அபாயத்தை கணிசமாகக் குறைக்கிறது PFRDA 2024 பிப்ரவரி 20 ஆம் தேதி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply