TN 12th Result 2024 : 12 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 6 ஆம்) தேதி காலை 9.30 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை டிபிஐ வளாகத்தில் (TN 12th Result 2024) வெளியிடப்பட்டது. www.tnresults.nic.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். தமிழகத்தில் 12வது பொதுத்தேர்வில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 94.56 சதவீதம் ஆகும். கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 94.04 சதவீதம் தேர்ச்சி பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் (TN 12th Result 2024) முடிவுகளைப் பார்க்கலாம். இணையதளம், செல்போன், பள்ளிகள் மற்றும் தகவல் மையங்கள் மூலம் தடையின்றி தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தேர்ச்சி சதவீதங்கள் :

  • ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம்: 94.56 சதவீதம்
  • மாணவர்கள் தேர்ச்சி விகிதம்: 92.37 சதவீதம்
  • மாணவிகள் தேர்ச்சி விகிதம்: 96.44 சதவீதம்

பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம் :

  • அரசு பள்ளிகள் – 91.32 சதவீதம்
  • அரசு உதவி பெறும் பள்ளிகள் – 95.49 சதவீதம்
  • தனியார் பள்ளிகள் – 96.7 சதவீதம்
  • பெண்கள் பள்ளிகள் – 96.39 சதவீதம்
  • ஆண்கள் பள்ளிகள் – 86.96 சதவீதம்
  • இருபால் பள்ளிகள் – 94.7 சதவீதம்

TN 12th Result 2024 - 12 பொதுத்தேர்வு 2024 :

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடந்தது. இந்தத் தேர்வை சுமார் 7.8 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதையடுத்து மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி மாநிலம் முழுவதும் 83 மையங்களில் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி 13ம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து, இணையதளத்தில் மதிப்பெண்களை பதிவேற்றம் உள்ளிட்ட பிற பணிகளும் முடிக்கப்பட்டன. இதையடுத்து, ஏற்கனவே அறிவித்தபடி, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 6) காலை 9:30 மணிக்கு (TN 12th Result 2024) வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்குப் பதிலாக, தேர்வுத் துறை அதிகாரிகளால், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார்.

Latest Slideshows

Leave a Reply