Setting Up Smart Classrooms : ரூ.1000 கோடியில் தமிழ்நாட்டு அரசு தொடக்கப்பள்ளிகள் ஸ்மார்ட்டாக்கப்படும்

The Task Of Setting Up Smart Classrooms :

தமிழ்நாட்டு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வருகின்ற கல்வி ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளில் ரூ.1000 கோடி செலவில்  ஸ்மார்ட் வகுப்பறைகளை (Setting Up Smart Classrooms) அமைக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணிகள் ஆனது தீவிரமாக நடைபெற்று வருகின்றது.    இதன் முதல் கட்டமாக தமிழக மாநிலம் முழுவதும் உள்ள 23,000 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டுகள் (Setting Up Smart Classrooms) நிறுவும் பணிகள் ஆனது தொடங்கப்பட்டு முழுமையைப் பெற்று வருகின்றன. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் வருகின்ற 2024 ஜூன் மாதத்துக்குள் 50 சதவீத பணிகள் நிறைவடையும் என்று தெரிவித்துள்ளனர். இந்தக் 2024-25 ஆம் கல்வியாண்டு ஆனது தொடங்கப்படும் போது, ​​தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் படிக்கும் தொடக்கப் பள்ளி மாணவர்களும் தங்களது பள்ளி வளாகங்களில் ஸ்மார்ட் போர்டுகளைப் பெறுவார்கள்.

500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு நிறைவு பெற்றுள்ள தகவல்கள் :

  • அரியலூர் ஆண்டிமடம் –  86 No.s
  • நாகை மாவட்டம் வேதாரண்யம் – 22 No.s
  • மொத்தம் 201 No ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆனது கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் மங்களூர், நல்லூர், பண்ருட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
  • மொத்தம் 157 No ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆனது சேலத்தில் பெத்தநாயக்கன்பாளையம், நங்கவல்லி, தாரமங்கலம், கொளத்தூர், ஏற்காடு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், மேல்மலையனூர், திருவெண்ணெய்நல்லூர் ஆகிய இடங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் (Setting Up Smart Classrooms) அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வழங்கப்பட உள்ள மற்றைய இணைப்புகள் :

  • பிராட்பேண்ட் இணைப்புகள் 8,000 பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
  • கையடக்க கணினி ஆனது அரசு தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் 80,000 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
  • அகண்ட அலைவரிசை இணையதள இணைப்புகள் 8,000 அரசுப்பள்ளிகளுக்கு வழங்கவும் பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply