New Pampan Bridge : பாம்பன் புதிய பாலம் இந்தியாவில் செங்குத்தாக திறக்கப்படும் முதல் பாலம்

செங்குத்தாக திறக்கப்படும் இந்தியாவின் முதல் பாலம் :

பாம்பன் கடலில் நவீன வசதிகளுடன் ரூ.550 கோடியில் புதிய ரயில் பாலம் (New Pampan Bridge) 2.8 கி.மீ. நீளத்துக்கு கட்ட ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. அதிகரித்து வரும் பயண தேவைகளை ஈடுகட்டும் நோக்கில் புதிய பாலத்தின் கட்டுமான பணிகள் (New Pampan Bridge) இந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர தெற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் வழங்கிய தகவல்கள் :

மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம், “110 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்து வந்த ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய பாம்பன் ரயில் பாலம் பலவீனமடைந்த நிலையில் தொடர்ந்து பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கப்பல்களுக்கு வழி விடுவதற்காக திறக்கப்படும் பாலத்தின் கர்டர் பகுதிகள் ஆனது குறிப்பிட்ட கால இடைவெளியில் வர்ண பூச்சு செய்தும் கடல் உப்பு காற்று காரணமாக துருப்பிடிக்க ஆரம்பித்தது. இந்த துரு காரணமாக சில இடங்களில் இரும்பு பட்டைகளின் கனம் குறைய ஆரம்பித்தது. இந்த பாலத்தின் அபாய நிலை காரணமாக சுமார் 2 கிலோ மீட்டர் பாலப்பகுதியில் ரயில்கள் 10 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்பட்டன. பராமரிப்பிற்காக இந்த ரயில் போக்குவரத்தை அடிக்கடி நிறுத்தவேண்டிய சூழல்கள் ஆனது ஏற்பட்டு வந்தது. தொடர்ந்து இந்த ரயில்பாலத்தை பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும் என தொழில் நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர். தற்போது புதிய ரயில்பாலம் (New Pampan Bridge) நவீன வசதிகளுடன் ரூ.550 கோடியில் 2.8 கி.மீ. நீளத்துக்கு கடலின் நடுவில் பெரிய கப்பல்கள் சென்று வரும் வகையில் கட்டப்பட்டு வருகிறது” என தகவல்கள் வழங்கியது.

செங்குத்தாக திறக்கப்படும் இந்தியாவின் முதல் பாலமாக இந்த புதிய பாலம் (New Pampan Bridge) அமையும் :

இந்த ரயில்பாலத்தின் நடுவிலே பெரிய கப்பல்கள் சென்று வரும் விதமாக நடுவிலுள்ள லிப்டிங் கிர்டர் ஆனது 17 மீட்டர் உயரத்துக்கு மேலே உயரத்தப்படும். அதாவது மின் இயந்திரவியல் சக்தி மூலம் லிஃப்டிங் கிர்டர் செங்குத்தாக உயரத்தப்பட்டு திறந்து கப்பல்கள் செல்வதற்கு (கப்பல்கள் சென்று வரும் விதமாக) வழிவிடும். அதே நேரத்தில் மனித ஆற்றல் மூலம் பழைய ரயில்பாலத்தின் இருபுறமும் ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 76 கிர்டர்கள் ஆனது மண்டபம் பகுதியில் இருந்து கப்பலுக்காக திறக்கும் பகுதி பாலத்தில் ஏற்கனவே பொருத்தப்பட்டுவிட்டன. மின் மயமாக்கல் பணிகள் ஆனது பாலத்தின் 1.5 கி.மீ. நீளத்துக்கு நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள ரயில் பாதை மின்மயமாக்கல் பணி மற்றும் கிர்டர்கள் பொருத்தும் பணி முடிவடைந்தவுடன் புதிய ரயில் பாலம் (New Pampan Bridge) சேவை துவங்கவுள்ளது. நவீன தொழில் நுட்பத்துடன் கட்டப்படும் இந்த புதிய ரயில்பாலம் எந்தவித பழுதும் இன்றி நீண்ட காலம் சேவையாற்றும்.

Latest Slideshows

Leave a Reply