Status Of Whatsapp - இந்தியாவில் Whatsapp சேவை தொடருமா?

Status Of Whatsapp - இந்தியாவில் Whatsapp சேவை தொடருமா? - பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

உலகெங்கும் வசிக்கும் 330 கோடி மக்கள் Meta நிறுவனத்திற்கு சொந்தமான Whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் இந்த Whatsapp செயலியை சுமார் 40 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த Whatsapp செயலி ஆனது நமது தகவல் பரிமாற்ற முறைகளில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இந்த Whatsapp செயலியை மக்கள் தனிப்பட்ட தகவல் பரிமாற்றத்தில் தொடங்கி தொழில் சம்பந்தப்பட்ட தகவல் பரிமாற்றங்கள் வரை அனைத்து விதமான தகவல் பரிமாற்றத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த உலகத்தில் Whatsapp செயலியை பயன்படுத்தாதவர்களே இல்லை என கூறும் அளவிற்கு மக்கள் இந்த Whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். எந்தவித கட்டணமும் இல்லாமல் இந்த Whatsapp செயலியை மக்கள்,

  • தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும்.
  • புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்யவும்.
  • ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்யவும் பயன்படுத்துகிறார்கள்.

ரகசியங்களை கேட்டு மத்திய அரசு நெருக்கடி தந்தற்கு வாட்ஸ்அப் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது :

தற்போது பலரும் இந்த Whatsapp செயலியை பயன்படுத்தி போலியான தகவல்களை பரப்பி வருகின்றனர். இந்த செயல் சமுதாயத்தில் மற்றும் நாட்டில்  கூச்சல், குழப்பம் மற்றும் அமைதியின்மையை ஏற்படுத்தி வருகின்றது. மத்திய அரசு ஆனது இதை தடுக்கும் விதத்தில் மற்றும் அவர்களை கண்டுபிடிக்கும் பொருட்டு இந்த போலியான செய்தியை பகிர்ந்த நபரின் டேட்டாக்களை கொடுக்க வேண்டும் என வாட்ஸ்அப் நிறுவனத்திடம் கேட்டுள்ளது. மத்திய அரசு ரகசியங்களை கேட்டு நெருக்கடி தந்தற்கு வாட்ஸ்அப் நிறுவனம் மறுப்பு (Status Of Whatsapp) தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் 2021ல் மத்திய அரசு கேட்கும்போது வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் வைரலாகும் தகவல்களை முதன் முதலில் அனுப்பியவர் பற்றிய விவரங்களை கண்டறிந்து அழிக்க வேண்டும் என்று மாற்றம் செய்யப்பட்டது. விவரங்களை பகிர முடியாது எனக் கூறி இதனை எதிர்த்து வாட்ஸ்அப் மற்றும் மெட்டா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. இந்த வழக்கின் (Status Of Whatsapp) விசாரணை கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

மெட்டா நிறுவன வழக்கறிஞர் வாதங்கள் :

அப்போது வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் அனைத்து தகவல்களும் என்கிரிஷன் முறையில் பாதுகாப்பாக அனுப்பப்படுவதாகவும், என்கிரிஷன் முறையை நம்பி 40 கோடி இந்தியர்கள் வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்தி வருவதாகவும் மெட்டா நிறுவன வழக்கறிஞர் தெரிவித்து உள்ளார். மேலும், வாட்ஸ்அப் தகவல்கள் மற்றும் பயனாளர்களின் விவரங்களை வெளியிடக் கூறும் இந்த செயல் ஆனது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்றும் தெரிவித்து உள்ளார்.  இந்தியாவில் இந்த விதிமுறை முழுமையாக செயல்படுத்தப்பட்டால், Meta நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டியதிருக்கும் என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மெட்டா நிறுவன வழக்கறிஞர் வாதங்களை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளனர். இந்த வழக்கில் நீதிபதிகளின் தீர்ப்பை பொறுத்தே வாட்ஸ்அப் இந்தியாவில் சேவையைத் தொடருமா அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுமா (Status Of Whatsapp) என்பது தெரியவரும். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Latest Slideshows

Leave a Reply