
-
New Rules From May 1st ATM Withdrawal Charges : ஏடிஎம் மூலம் பணம் எடுக்க கூடுதல் கட்டணம் மே 1-ம் தேதி முதல் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
-
Pope Francis Passed Away : போப் பிரான்சிஸ் காலமானார் சோகத்தில் கத்தோலிக்க திருச்சபை
-
China Launched 10G Broadband : வரலாற்றில் முதல் முறையாக சீனா 10ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளது
City With Most Millionaires In Asia : ஆசியாவின் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட 3வது நகரம்
பீஜிங்கை பின்னுக்குத் தள்ளிய இந்திய சாதனை - மும்பை ஆசியாவின் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட 3-வது நகரம்
பிரபல ஹரன் ரிப்போர்ட் 2024 (Hurun 2024 Report) என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் உள்ள மும்பை நகரமானது ஆசியாவின் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நகரமாக (City With Most Millionaires In Asia) தேர்வாகி உள்ளது. இதற்கு முன்னதாக இந்த வரிசையில் 3-வது இடத்தில் இருந்த சீனாவின் தலைநகர் பீஜிங்கை பின்னுக்குத் தள்ளி மும்பை அந்த இடத்தை கைப்பற்றி உள்ளது.
- அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரம் முதலிடத்தில் உள்ளது. மொத்தம் 119 கோடீஸ்வரர்கள் நியூயார்க்கில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- பிரிட்டனில் உள்ள லண்டன் நகரம் இரண்டாவது இடத்தில் உள்ளது. மொத்தம் 97 கோடீஸ்வரர்கள் லண்டனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- இந்தியாவில் உள்ள மும்பை நகரம் மூன்றாவது இடத்தில் உள்ளது. மொத்தம் 92 கோடீஸ்வரர்கள் மும்பையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- சீனாவில் உள்ள தலைநகர் பீஜிங் 91 கோடீஸ்வரர்களுடன் 4வது இடத்திற்கு இறங்கி உள்ளது.
- மும்பை ஆனது இந்தியாவின் கோடீஸ்வரர்களின் நகரம் என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படும் பெருமை பெற்றுள்ளது.
City With Most Millionaires In Asia - பீஜிங்கை பின்னுக்குத் தள்ளிய இந்திய சாதனை :
மும்பையில் கடந்த 2023 ஓராண்டில் மட்டும் 26 கோடீஸ்வரர்கள் பட்டியலில் புதிதாக இணைந்து உள்ளதாக அந்த பிரபல ஹரன் ரிப்போர்ட் 2024 (Hurun 2024 Report) என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் (City With Most Millionaires In Asia) தெரிவித்துள்ளது. மும்பை நகரின் வளமானது கடந்த 2023 ஒரு ஆண்டில் மட்டும் 47 சதவீதம் அதிகரித்து 445 பில்லியன் டாலர்களாக உயர்ந்து உள்ளதாக தெரிவித்துள்ளது.
சீனா தலைநகர் பீஜிங்கில் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ஏறத்தாழ 28 சதவீதம் வரை குறைந்து 265 பில்லியன் டாலராக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆசியாவிலேயே அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நகரமாக மும்பை உருவாக முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, HCL நிறுவனர் சிவ் நாடார், சீரம் இன்ஸ்ட்டியூட் தலைவர் சைரஸ் பூனவாலா திலீப் சங்வி, குமார் மங்கலம் பிர்லா மற்றும் ராதாகிருஷ்ணன் தமனி ஆகியோர் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
இந்திய பொருளாதார நிபுணர்கள் கருத்து :
இந்திய பொருளாதார நிபுணர்கள், “இந்திய தொழில்துறை ஆனது மத்திய அரசால் செயல்படுத்தப்படும் தொழில்துறைக்கு உகந்த கொள்கைகள் மற்றும் பொருளாதார தாராளமயமாக்கல் காரணமாக சிறப்பான வளர்ச்சி கண்டு உள்ளது. இந்த வளர்ச்சியின் மூலம் இந்திய பொருளாதார கொள்கைகளை மேம்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் கிடைத்து உள்ளது” என்று கருத்து தெரிவித்து உள்ளனர்.
Latest Slideshows
-
New Rules From May 1st ATM Withdrawal Charges : ஏடிஎம் மூலம் பணம் எடுக்க கூடுதல் கட்டணம் மே 1-ம் தேதி முதல் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
-
Pope Francis Passed Away : போப் பிரான்சிஸ் காலமானார் சோகத்தில் கத்தோலிக்க திருச்சபை
-
China Launched 10G Broadband : வரலாற்றில் முதல் முறையாக சீனா 10ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளது
-
Easter Celebration : களைகட்டும் ஈஸ்டர் பண்டிகை...தலைவர்கள் வாழ்த்து
-
Easter 2025 : ஈஸ்டர் திருநாள் வரலாறும் கொண்டாட்டமும்
-
Black Urad Dal Benefits In Tamil : கருப்பு உளுந்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
-
CSIR Recruitment 2025 : மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் 40 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Retro Movie Trailer Release : ரெட்ரோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
-
TN Cabinet Approves Space Industry Policy 2025 : விண்வெளி தொழில் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
-
Good Friday 2025 : புனித வெள்ளி வரலாறும் கொண்டாட்டமும்