Vani Jayaram: கலை வாணியாக பிறந்து இசை ராணியாக வாழ்ந்த வாணி ஜெயராம்

Vani Jayaram: கலை வாணியாக பிறந்து இசை ராணியாக வாழ்ந்தவர் இன்று காற்றோடு காற்றாக நம்முடன் வாழ்கிறார். இந்த ஆண்டில் மத்திய அரசின் பத்மபூஷன் விருதை பெற்ற வாணி ஜெயராம் நம்மை விட்டு 04.02.2023 அன்று பிரிந்தாலும் காற்றோடு காற்றாக அவரது பாடல்கள் மூலம் நம்முடன் வாழ்கிறார், நிச்சயமாக வாழ்வார்.    

ஒரு எளிய தமிழ் குடும்பத்தில் துரைசாமி ஐயங்கார் – பத்மாவதி தம்பதியர்க்கு 1945, Nov 30-ல்  5-வது மகளாக வேலூரில் பிறந்தார். இவர் முறையான கர்நாடக சங்கீத பயிற்சியை ரங்கா ராமுநஜ ஐயங்கார் மற்றும் கடலுார் ஸ்ரீநிவாஸ் அவர்களிடம் பெற்றார். இவருடன் பிறந்தவர்கள் 5 சகோதரிகள் மற்றும் 2 சகோதர்கள் ஆவர்.

இவர் தனது கல்லூரி படிப்பை மெட்ராஸ் குயின் மேரி கல்லூரியிலும் மற்றும் மெட்ராஸ் பல்கலைக்கழகத்திலும் முடித்த பிறகு, ஸ்டேட் பேங்க்  ஆஃப் இந்தியாவில் (SBI)ல் பணியாற்றியுள்ளார். இவர்  தனது  இசை பயணத்தை பாலிவுட்டில் (ஹிந்தி திரை இசை உலகில்) தொடங்கினார். இவர்  குட்டி படத்தில் பாடிய “போலு மே பப்பி” என்ற பாடல் மிகவும் பிரபலம் ஆகும். 

லதா மங்கேஸ்கர்  போன்ற ஜாம்பவான்கள் உள்ள ஹிந்தி உலகில் அவரால் தொடர்ந்து பயணம் செய்ய இயலவில்லை. ஆனால் அவரது தமிழ் திரை உலக இசை பயணம் சிறப்பாக அமைந்தது. அவர் தீர்க்க சுமங்கலி என்ற படத்தில் பாடிய “மல்லிகை என் மன்னம் மன்னன் மயங்கும்“ என்ற பாடல் மிக பிரபலமடைந்து அவரது வெற்றி பயணத்திற்கு அடித்தளமிட்டது. இவரது திறமை அறிந்து திரு எம்.ஜி.ஆர் அவர்கள் தனது படங்களில் அவர் ஒரு பாடல் ஆவது பாட தொடர்ந்து வாய்ப்புகள் அளித்து வந்தார். 

மறைந்த முதல்வர் . ஜெ ஜெ. ஜெயலலிதா மற்றும் ஸ்ரீதேவி அவர்களுக்கு பின்னணி பாடல்கள் பாடிய பெருமை இவருக்கு உண்டு. மறைந்த முதல்வர் ஜெ ஜெ. ஜெயலலிதாவுக்காக இவர் பாடிய “சிப்பியிலே  முத்து”  என்ற பாடலும், ஸ்ரீதேவி அவர்களுக்காக இவர் பாடிய “வசந்த கால நதிகளிலே” என்ற பாடலும் மிகவும் பிரபலம் ஆகும். 

Vani Jayaram - Platform Tamil

தமிழ் திரையுலகில் இளைய ராஜா சகாப்தம் தொடங்கியபோது அதில் இவருக்கும் ஒரு தனியிடம் கிடைத்தது.  நல்ல, நல்ல புதுப் புதுமுயற்சிகளுக்கான நல்ல, நல்ல வாய்ப்புகள்  கிடைத்தன. இசை உலகில் நல்ல பெயரும், புகழும்   அங்கீகாரமும் கிடைத்தன.  குறிப்பாக மது மயக்கத்தில் விரக தாபத்தோடு பாடுவது போன்ற  “நானே நானா யாரோ தானா“ என்ற பாடல் மிக பெரிய அங்கீகாரத்தை பெற்றது.

தெலுங்கு திரை உலகில் பெயர் பெற்ற இயக்குனர் k.விஸ்வநாத் இயக்கத்தில் வெளிவந்த மாபெரும் காவியமான சங்கராபரணம் என்ற பட பாடல்கள் இவருக்கு தேசிய விருது என்ற மிக பெரிய ஆபரணத்தை தந்தது.  குறிப்பாக “மானஸ  சஞ்சரரே“, “ப்ரோ சேறு வா“ என்ற கீர்த்தனை பாடல்கள் இன்றளவும் சிறந்த தூக்க மருந்தே என்று கூட சொல்லலாம்.   

இவர் 1970 களில் தொடங்கி 1990 களின் பிற்பகுதி வரை இந்தியா முழுவதும் இருந்த பல இசையமைப்பாளர்களின் பின்னணியில் பாடியுள்ளார். இவர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு தவிர மராத்தி, மலையாளம் என 19 பல்வேறு இந்திய மொழிகளில் 10,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி  அசத்தியவர், 1000 மேற்பட்ட இந்தியத் திரைப்படங்களுக்குப் பின்னணி இசையமைத்தவர் மற்றும் 1000 க்கும் மேற்பட்ட பக்தி மற்றும் தனியார் ஆல்பங்களை பதிவு செய்து அசத்திய ஈடு இணையற்ற பின்னணி பாடகி ஆவார்.

இவரது இசை சாதனைகளுக்காக தென்னிந்திய திரைப்பட இசையில் உயரிய சிறந்த பெண் பாடகிக்கான விருதை NAFA (North American Film Awards 2017) 2017ல் பெற்றார். மாநில அரசு விருதுகளை ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் குஜராத் மாநிலங்களில் இருந்து பெற்றுள்ளார்.

இவர் இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் ஏராளமான தனி இசை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார். இந்த ஆண்டில் மத்திய அரசின் பத்மபூஷன் விருதை பெற்ற வாணி ஜெயராம் நம்மை விட்டு 04.02.2023 அன்று பிரிந்தாலும் காற்றோடு காற்றாக நிச்சயமாக அவரது பாடல்கள் மூலம் என்றும் நம்முடன் வாழ்கிறார், நிச்சயமாக வாழ்வார்.    

Leave a Reply

Latest Slideshows