Vidaamuyarchi First Look : விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (Vidaamuyarchi First Look) வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விடாமுயற்சி ஆகும். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசைமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் அஜித். இதைத் தொடர்ந்து இந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டு ரசிகர்களிடம் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆனால் படத்தின் தலைப்புக்கு பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வராததால் அஜித் ரசிகர்கள் பொறுமை இழந்தனர். அஜர்பைஜானில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டு படக்குழுவினர் சென்னை திரும்பினர். நிதி நெருக்கடி காரணமாக கடந்த 6 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு அஜர்பைஜானில் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

Vidaamuyarchi First Look - விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக்:

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஓராண்டுக்குப் பிறகு வெளியாகியுள்ளது. குட் பேட் அக்லி படத்தின் அறிவிப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் என அடுத்தடுத்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து வரும் பொங்கலுக்கு வரவுள்ள படத்துக்கு இப்போதிருந்தே சரியாக புரமோஷனை செய்து வரும் நிலையில், விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை (Vidaamuyarchi First Look) வெளியிட்டு விடாமுயற்சி பக்கம் அஜித் ரசிகர்களை திருப்ப லைகா நிறுவனம் முடிவு செய்து போஸ்டரை வெளியிட்டுள்ளது.

மங்காத்தா கிளைமேக்ஸில் அஜித்குமார் மற்றும் அர்ஜுன் இருவரும் பணம் நிறைந்த பேக்கை தூக்கிக் கொண்டு கெத்தாக நடந்து வருவது போல, இந்த படத்தில் அஜர்பைஜான் சாலையில் அஜித்குமார் மட்டும் பண பேக்கை தூக்கிக் கொண்டு நடந்து வருவது போல போஸ்டர் அமைந்துள்ளது. விடாமுயற்சி படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமத்தை Netflix பெற்றுள்ளது. இப்படம் வரும் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.

Latest Slideshows

Leave a Reply